ஜனவரியில் திறக்க மலேசியா பரிசீலனை

சிங்கப்பூர் எல்லைக் கட்டுப்பாட்டை முழுமையாக நீக்குவது பற்றி தகவல்

தினந்­தோ­றும் பய­ணி­களை அனு­ம­திக்­கும் வகை­யில் மலே­சியா-சிங்­கப்­பூர் எல்­லையை ஜன­வரி முதல் முழு­மை­யா­கத் திறந்­து­வி­டு­வ­தற்­கான சாத்­தி­யம் குறித்து பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­வ­தாக மலே­சிய சுகா­தார அமைச்சு தெரி­வித்து உள்­ளது.

மலே­சி­யா­வில் டிசம்­பர் வரை நீட்டிக்­கப்­பட்­டி­ருக்­கும் நிபந்­த­னை­க­ளு­ட­னான நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை எந்த அள­வுக்­குப் பயன் தந்­துள்­ளது என்­ப­தைப் பொறுத்து சிங்­கப்­பூ­ருட னான எல்­லையை முழு­மை­யா­கத் திறப்­ப­தற்­கான சாத்­தி­யம் குறித்து தீர்­மா­னிக்­கப்­ப­டும் என்று மலே­சிய சுகா­தார அமைச்­சர் ஆதம் பாபா நேற்று தெரி­வித்­தார்.

கட்­டுப்­பாடு நடப்­பில் உள்ள நான்கு மாத காலத்­தில் எல்­லைக் கட்­டுப்­பாடு, தனி­ம­னித இடை­வெளி, தனி

­ந­பர் பாது­காப்­புச் சாத­னம் போன்ற அம்­சங்­கள் மீது கூடு­தல் கவ­னம் செலுத்­தப்­படும் என்­றார் அவர்.

எல்­லை­யைத் திறந்­து­வி­டு­வ­தற்கு முன்­னர் நடமாட்டக் கட்­டுப்­பாட்டு ஆணை நடப்­பில் உள்ள காலத்­தில் புதி­தாக நோய்த்தொற்று பர­வு­வ­தைத் தடுக்­கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு அர­சாங்­கம் முன்­னு­ரிமை அளிக்­கும் என்­றார் டாக்­டர் ஆதம்.

முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்கு நன்றி தெரி­விக்க லெகோ­லேண்ட் மலே­சியா என்­னும் ஓய்­வுத்­த­ளத்­தில் நடை­பெற்ற நிகழ்­வுக்­குப் பின்­னர் பேசிய அவர், கொவிட்-19 நோய்த் தொற்­றால் மக்­க­ளின் வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கும் நிலை குறித்து ஆரா­யப்­படும் என்­றும் அதன் அடிப்­ப­டை­யில் எல்­லையை முழு­மை­யா­கத் திறக்­க­லாமா என்­பது குறித்த முடி­வெ­டுக்­கப்­படும் என்­றும் தெரி­வித்­தார்.

“நாட்­டின் பொரு­ளி­ய­லும் முக்­கி­யம்; மக்­க­ளின் சுகா­தா­ர­மும் முக்­கி­யம். நாம் இரண்­டை­யும் சரி­ச­ம­மா­கப் பார்க்க வேண்­டும்,” என்று டாக்­டர் ஆதம் கூறி­னார்.

ஜோகூர் மாநில பொரு­ளி­யல் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்டு வரு­வ­தால் மலே­சிய-சிங்­கப்­பூர் எல்லை விரை­வா­கத் திறக்­கப்­ப­டு­வது அவ­சி­யம் என்­றும் ஜோகூர் முதல்­வர் ஹஸ்னி முகம்­மது அண்­மை­யில் தெரி­வித்­தி­ருந்­தார். அவ­ரது கருத்து குறித்­துப் பேசிய டாக்­டர் ஆதம், டிசம்­பர் மாதம் வரை இரு நாடு­க­ளின் கிரு­மிப் பர­வல் நிலை­மையை தமது அமைச்சு தீவி­ர­மாக ஆரா­ய­வேண்டி உள்­ளது என்­றும் முழுமையான எல்லை திறப்பு பற்றி அதன் அடிப்­ப­டை­யி­லேயே முடி­வெ­டுக்­கப்­படும் என்­றும் கூறி­னார்.

இருப்­பி­னும் சிங்­கப்­பூ­ரு­ட­னான எல்­லையை இயன்­ற­வரை விரை­வில் திறக்க வேண்­டு­மென கூட்­ட­ரசை தாம் தொடர்ந்து வலி­யு­றுத்­தப்­போ­வ­தாக திரு ஹஸ்னி தெரி­வித்­துள்­ளார்.

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யில் இரு கட்­டுப்­பாட்­டுத் திட்­டங்­க­ளின் வழி தற்­போது போக்­கு­வ­ரத்து நடை­பெற்று வரு­கிறது.

இரு­வழி தடை­யற்­ற பய­ணம் (ஆர்­ஜி­எல்), அவ்­வப்­போது மேற்­கொள்­ளப்­படும் பயண ஏற்­பா­டு­கள் (பிசிஏ) ஆகி­யன அத்­திட்­டங்­கள்.

ஆகஸ்ட் 31 வரை ஆர்­ஜி­எல் திட்டத்­தின்­கீழ் 320 பேரும் பிசி­ஏ­வின்­கீழ் 8,270 பேரும் இரு நாடு­க­ளுக்கு இடை­யில் வந்து சென்­ற­தாக திரு ஹஸ்னி நேற்று முன்­தி­னம் கூறி­னார்.

இவ்­விரு திட்­டங்­க­ளின் மூலம் சிங்­கப்­பூ­ருக்கு சென்று வரு­வோ­ரி­டம் தின­மும் 2,000க்கும் மேற்­பட்ட கொவிட்-19 பரி­சோ­தனை நடத்­தும் அளவுக்கு ஜோகூ­ரி­டம் வசதி வாய்ப்பு கள் இருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

“இவ்விரு திட்­டங்­க­ளின் மூல­மா­ன பய­ணம் மட்­டும் போதாது. சிங்­கப்­பூ­ருக்கு தின­மும் சென்று வரு­வ­தற்­காக எல்லை முழு­மை­யா­கத் திறக்­கப்­பட வேண்­டும் என்­பதே ஜோகூரின் விருப்­பம். ஆர்­ஜி­எல், பிசிஏ வரும் முன்­னர் இரு­நா­டு­க­ளுக்­கும் இடை­யில் நட­மாட்­டம் இருந்­தது. மருத்­து­வப் பொருட்­க­ளை­யும் உண­வுப் பொருட்­க­ளை­யும் சிங்­கப்­பூ­ருக்கு மலே­சியா அனுப்பி வந்­தது,” என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!