வருமானமில்லை... வசதியில்லை... ஒருகாலத்தில் உதவியவரை உடன் வைத்துப் பராமரிக்கும் 71 வயது கமலா

தள்ளாத வயதிலும் ஆதவரற்ற 87 வயது யாப் சு வுன் என்பவரை தமது வாடகை வீட்டில் வைத்து பராமரித்து வருகிறார் 71 வயதான திருவாட்டி கமலா.

இருவருக்கும் எந்த வருமானமும் இல்லை, வசதியும் இல்லை. ஆனாலும் ஒருகாலத்தில் தனக்கு உதவியவருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார் இந்த மூதாட்டி.

இருவரும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள். ஏறக்குறைய எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது வீடுகள் இடிக்கப்பட்ட பின்னர், பல இடங்களில் வசித்த திருவாட்டி கமலா, இறுதியில் ஜலான் குபாங் புவாயாவில் உள்ள வீட்டுக்குக் குடி வந்தார்.

ஐந்து மாதங்களுக்கு முன்னர் பல வீடுகள் மாறி, உதவிக்கு ஆளில்லாமல் சிரமப்பட்ட திரு யாப்பை தம் வீட்டுக்கு அழைத்து வந்தார்.

“அவருக்கு மிகவும் வயதாகி விட்டது. என் வீட்டிலேயே தங்க வைத்தால் அவரைப் பராமரிக்க வசதியாக இருக்கும் என்பதால் என் வீட்டுக்கு அழைத்து வந்தேன். அவரால் இப்போது நடக்கக்கூட முடியவில்லை,” என்ற திருவாட்டி கமலா, கடந்த காலத்தில் தமக்கு உதவிய திரு யாப்பை தம்மால் கைவிட முடியாது என்றார்.

யாப் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவரது சகோதரரும் இறந்துவிட்டார்.

முன்பு பல கூலி வேலைகளைச் செய்து வந்த திருவாட்டி கமலா வேலைக்குச் செல்லும் நேரத்தில், திரு யாப் அவரது பேரப்பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

கமலாவின் பேரப்பிள்ளைகளான ஆர்.தினகரன், 23, ஆர். சரவணன், 21 இருவரும் அடிக்கடி வந்து இருவரையும் பார்த்துச் செல்கிறார்கள். சாலை விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்ட தினகரனுக்கு அண்மையில்தான் வேலை கிடைத்தது.

கமலாவுக்கு சமூக நலவாழ்வுத் துறையிலிருந்து மாதம் 350 ரிங்கிட் கிடைக்கிறது. நிரந்தரவாசதகுதியே இருப்பதால் திரு யாப் சமூக உதவிக்கு தகுதிபெறவில்லை.

“மற்றவர்கள் கதை பேசுவார்கள். அதுபற்றி எனக்குக் கவலையில்லை. இனம் பற்றி நான் யோசிப்பதே இல்லை.

“என் பார்வை மோசமாகி விட்டது. ஆஸ்துமாவும் கடுமையாகி விட்டது. இல்லாவிட்டால் நான் வேலைக்குப் போவேன். கிடைக்கும் கொஞ்சப் பணத்தில் வாழ்க்கையை ஓட்டுவது சிரமம். ஆனாலும் நான் யாப்பை கைவிட மாட்டேன்,” என்று திருவாட்டி கமலா கூறினார்.

மலேசிய மன்னர் உட்பட பலரது உள்ளத்தையும் இவர்களது நட்பு கசிய வைத்தது. அவரும் தனிப்பட்ட முறையில் திருவாட்டி கமலாவுக்கு நன்கொடை அளித்தார்.

எம்.கமலாவுக்கு 11,730 மலேசிய ரிங்கிட் ($3,863 சிங்கப்பூர் வெள்ளி) வரை பொதுமக்கள் நன்கொடை அளித்துள்ளதாக செமாம்பு சட்டமன்ற உறுப்பினர் லீ சியன் சுங்கின் சிறப்பு அதிகாரி சான் சுன் குவாங் நேற்று தி ஸ்டார் பத்திரிகையிடம் தெரிவித்தார்.

“சிலர் நேரில் சென்று கமலாவுக்கு உதவினர். ஜோகூரைச் சேர்ந்த ஒருவர் கமலாவின் மூன்று மாத வாடகைக்கு பாக்கியைச் செலுத்தியதுடன் வரும் ஜனவரி மாதம் வரையிலான வாடகையையும் அவர் செலுத்தியுள்ளார்.

“மற்றொருவர் கமலாவுக்கு மூக்குக் கண்ணாடி வாங்கிக் கொடுத்துள்ளார். பிரேசில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்தும் அவருக்கு நன்கொடைகள் வந்தன,” என்றார் திரு சான் கூறினார்.

சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகத்தால் திரட்டப்பட்ட நன்கொடை கமலாவுக்கு மாதாந்திர அடிப்படையில் வழங்கப்படும் என்ற அவர், “திருவாட்டி கமலாவின் பரிவுள்ளம் பலரது உள்ளதைத் தொட்டுள்ளது,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!