மலேசியர்களின் வெளிநாட்டு வாழ்க்கைத்துணை, பிள்ளைகள் மலேசியாவுக்குள் நுழைய அனுமதி; சில நாடுகளுக்கு விலக்கு

மலேசியர்கள், மலேசியாவில் நிரந்தரவாசத் தகுதி பெற்றவர்களின் வெளிநாட்டு வாழ்க்கைத் துணைகளும் பிள்ளைகளும் மலேசியாவுக்குள் நுழைவதற்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம் என்று அந்நாட்டு குடிநுழைவு ஆணைய தலைமை இயக்குநர் கைருல் ஸைமீ தாவூத் தெரிவித்துள்ளார். நீண்டகால வருகை அனுமதி அட்டை வைத்திருக்காத அத்தகையோருக்கு இது பொருந்தும்.

மலேசியாவுக்குள் நுழைய அனுமதி பெற்றுள்ள நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று பெர்னாமா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

“மலேசியாவுக்குள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நாடுகளைச் சேர்ந்தவர்களின் விண்ணப்பம், அந்நாடுகளுடனான கட்டுப்பாடுகள் மீட்கப்படும் வரை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது,” என்று திரு தாவூத் தெரிவித்தார்.

அந்த விண்ணப்பங்கள் gforce@imi.gov.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, மதிப்பீட்டுக்காக அனுப்பப்பட வேண்டும்.

மேலும், www.imi.gov.my என்ற இணையப்பக்கத்தில் கூடுதல் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!