50,000 ரிங்கிட் மதிப்பிலான ‘ரோஜா’ பூங்கொத்தை மனைவிக்கு பரிசளித்த மலேசிய ஆடவர்

மனைவியின் மீதான அன்பின் வெளிப்பாடாக, 100 ரிங்கிட் நோட்டுகளால் 99 ‘ரோஜா’ செண்டுகளாகச் செய்து அவற்றினாலான பூங்கொத்தைப் பரிசாக அளித்திருக்கிறார் ஜோகூர் பாரு ஆடவர் ஒருவர்.

மொத்தம் 495 நோட்டுகளை 99 ‘ரோஜா’ செண்டுகளாக உருவாக்க ஆறு பேர் மூன்று நாட்களுக்குப் பணிபுரிய வேண்டியிருந்தது என்று ஸ்கூடாயில் கடை வைத்துள்ள அந்த பூச்செண்டு கடைக்காரரான லியூ வான் லிங் தெரிவித்தார். ஒவ்வொரு பூச்செண்டுக்கும் ஐந்து 100 ரிங்கிட் ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்பட்டன.

ஒரு மீட்டர் உயரம், ஒரு மீட்டர் விட்டம், 3 கிலோ எடையுள்ள அந்த பூங்கொத்து விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

30களில் இருக்கும் ஒரு வர்த்தகர் தமது மனைவியின் பிறந்தநாளுக்காக அந்த பூங்கொத்தைப் பரிசளிக்க விரும்பினார்.

அந்தப் பூங்கொத்தை செய்வதற்காக 3,000 ரிங்கிட் கட்டணம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கொவிட்-19 சூழலில் பிரிந்திருப்போர் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ரூபாய் நோட்டுகளைக்கொண்டு பூங்கொத்து செய்து வழங்குவது தற்போது 20% அதிகரித்திருப்பதாக கடைக்காரர் வான் லிங் குறிப்பிட்டார்.

இருந்தாலும் அந்தக் கடையில் இதுவரை செய்யப்பட்ட ‘பண நோட்டு’ பூங்கொத்துகளில் இதுவே ஆக அதிக மதிப்பிலானது என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!