சுடச் சுடச் செய்திகள்

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்தது மலேசிய உயர் நீதிமன்றம்

மலாக்கா: ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரை நால்வர் கொலை செய்ததை உறுதி செய்த மலேசிய உயர் நீதிமன்றம் நால்வருக்கு இன்று (செப்டம்பர் 19) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

எம்.பி. நமசிவாயம், 30, பி. நரேந்திரன்பதி, 33, பி, சேதுபதி, 32, ஐமான் மஸ்லான், 27 ஆகிய நால்வருக்கு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது ஃபிஅருஸ் ஜஃப்ரில் இன்று தண்டனை விதித்தார். 

நீதிபதி தண்டனையை வாசித்ததும் நால்வரும் அமைதியின்றி தலையை ஆட்டியதுடன் கண்ணீர் விட்டு அழுதனர்.

தாமன் பெர்தாம் ஜெயாவில் உள்ள ஜாலான் BJ 2ல் உள்ள ஒரு வீட்டின் முன்பு 32 வயதான பி.ஆர். சிவன் என்பவரை 2013ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி இரவு 10.45 மணியளவில் கொலை செய்ததாக குற்றவியல் தண்டனைச் சட்டம் 302ன் கீழ் அந்த நால்வர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டிலிருந்து ஏ. சதீஷ், 26, ஜி. வின்சென் லாரன்ஸ், 28 ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

விசாரணையின்போது 36 அரசுத்தரப்பு சாட்சிகளும் 10 தற்காப்புத் தரப்பு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon