சுடச் சுடச் செய்திகள்

சாபாவில் வெற்றி; பிரதமர் முகைதீனுக்கு மேலும் வலு

முதல்வர் பதவியைக் கைப்பற்ற இருவர் போட்டி மலே­சி­யா­வின் சாபா மாநில சட்­ட­மன்­றத் தேர்­த­லில் பெரிக்­காத்­தான் நேஷ­னல், பாரி­சான் நேஷ­னல் மற்­றும் சாபா பெர்­சத்து கட்சி (பிபி­எஸ்) ஆகி­யவை அடங்­கிய சாபா மக்­கள் கூட்­டணி வெற்றி பெற்­றது.

மொத்­த­முள்ள 73 இடங்­களில் சாபா மக்­கள் கூட்­டணி 38 இடங்­க­ளைக் கைப்­பற்­றி­யது. பாரி­சான் நேஷ­ன­லுக்கு 14 இடங்­களும் பெரிக்­காத்­தான் நேஷ­ன­லுக்கு 17 இடங்­களும் சாபா பெர்­சத்து கட்­சிக்கு ஏழு இடங்­களும் கிடைத்­தன. எதிர்த்­த­ரப்பு வாரி­சான் கூட்­டணி 32 இடங்­களை வென்­றது. சுயேச்சை வேட்­பா­ளர்­கள் மூன்று தொகு­தி­களில் வெற்றி பெற்­ற­னர்.

தேர்­த­லில் வென்று ஆட்சி அமைப்­பது உறு­தி­யா­கி­விட்ட நிலை­யில், யார் முதல்­வர் என்­பது இன்­னும் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை. சாபா பாரி­சான் நேஷ­னல் தலை­வர் புங் மொக்­தார் ராடின் அல்­லது சாபா பெரிக்­காத்­தான் நேஷ­னல் தலை­வர் ஹஜிஜி நூர் ஆகி­யோ­ரில் ஒரு­வரே முதல்­வ­ராக நிய­மிக்­கப்­படு­வார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

முதல்­வர் யார் என்­பதை முடி­வு­செய்ய சாபா மன்­னர் ஜுகார் மகி­ரு­தின் சற்று கால அவ­கா­சம் அளிக்­கும்­படி கேட்­டி­ருப்­ப­தாக திரு புங் சொன்­னார். திரு மொக்­தா­ரும் கூட்­ட­ணி­யைச் சேர்ந்த வேறு மூன்று தலை­வர்­களும் நேற்று மன்­ன­ரைச் சந்­தித்­துப் பேசி­னர். அதன்­பின், மன்­னர் கூடிய விரை­வில் முதல்­வரை முடி­வு­செய்­வார் என்று திரு புங் உறு­தி­ய­ளித்­தார்.

முன்­ன­தாக, மன்­னரே அடுத்த முதல்­வரை முடி­வு­செய்­வார் என்று திரு ஹஜிஜி நூரும் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார். நேற்று முன்­தி­னம் நள்­ளி­ர­வுக்­குப் பிறகு தேர்­தல் முடி­வு­கள் வெளி­யா­னதை அடுத்து, அடுத்த முதல்­வர் யார் என்ற விவா­தம் சாபா மக்­கள் கூட்­ட­ணி­யில் தொடங்­கி­விட்­டது. புங் மொக்­தார் அல்­லது ஹஜிஜி நூரே முதல்­வ­ரா­வார் என எதிர்­பார்க்­கப்­படும் நிலை­யில், அது தொடர்­பில் கூட்­ட­ணி­யில் நீண்ட விவா­தம் நடந்து வரு­கிறது.

இத­னி­டையே, பிர­த­மர் முகை­தீன் யாசின் மீது மக்­கள் கொண்­டுள்ள நம்­பிக்­கை­யைக் காட்­டு­வ­தாக சாபா சட்­ட­மன்­றத் தேர்­தல் முடி­வு­கள் அமைந்­துள்­ளன என்று மலே­சி­யா­வின் நிதி, பொரு­ளி­யல் அமைச்­சர் அஸ்­மின் அலி தெரி­வித்து இருக்­கி­றார். சாபா­வின் வளர்ச்­சிக்­கா­க­வும் மக்­க­ளின் நல்­வாழ்­விற்­கா­க­வும் கூட்­ட­ரசு உணர்வை நிலை­நி­றுத்­தி­ய­தன் மூலம் சாபா மக்­கள் தங்­க­ளின் முதிர்ச்­சியை வெளிப்­படுத்தி உள்­ள­னர் என்று அவர் சொன்­னார்.

“மக்­களை நன்கு கவ­னித்­துக்­கொள்­ளும், அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கும், மாநில இறை­யாண்­மைக்­கும் மக்­க­ளின் பாது­காப்­பிற்­கும் உத்­த­ர­வா­தம் அளிக்­கும் ஒரு மாநில அரசை சாபா மக்­கள் மக்­கள் தேர்­வு­செய்­துள்­ள­னர் என்­ப­தைத் தேர்­தல் முடி­வு­கள் தெளி­வா­கக் காட்­டு­கின்­றன,” என்­றார் திரு அஸ்மின்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon