‘தடுப்பு மருந்தை மலேசியா அடுத்த ஆண்டு தேர்ந்தெடுக்கும்’

கொவிட்-19க்கு எதிரான பல தடுப்பு மருந்துகள் தற்போது பரிசோதனை நிலையில் இருப்பதையடுத்து, அவற்றின் பரிசோதனை முடிவுகள் இவ்வாண்டு இறுதிவாக்கில் ஆராயப்பட்டு, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மலேசியாவில் பயன்படுத்தப்பட உள்ள தடுப்பு மருந்து குறித்து அரசாங்கம் முடிவெடுக்கும் என அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

தடுப்பு மருந்துக்கான கொள்முதல் தொடர்பாக சுகாதார அமைச்சு, நிதி அமைச்சு, தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் ஆகியவற்றுடன் கலந்து ஆலோசித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், ‘கோவேக்ஸ்’ திட்டத்தில் இணைவதன் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறினார்.

சீனாவிடமிருந்து தடுப்பு மருந்து பெறுவதன் தொடர்பிலான ஒப்பந்தமும் இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாக திரு கைரி தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!