ஜோகூரில் 109 கிலோ கஞ்சா பிடிபட்டது; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கைது

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் அடங்கிய போதைப்பொருள் கடத்தல் கும்பலை ஜோகூர் போலிசார் இன்று (அக்டோபர் 1) பிடித்தனர்.

அவர்களிடமிருந்து 272,500 ரிங்கிட் (S$89,500) மதிப்பிலான 109 கிலோ கஞ்சாவை போலிசார் கைப்பற்றினர்.

கும்பலின் தலைவனான 64 வயது பேட்ரியார்க், அவரது மனைவி, குழந்தைகள், மனைவியின் குடும்பத்தார் என எழுவர் கைதாகினர். அவர்களில் மூவர் பெண்கள்.

தாய்லாந்தில் இருந்து போதைப் பொருளை கடத்தி வந்து ஜோகூரில் விற்கும் இந்த கும்பல்கடந்த ஆண்டு முதலே இந்தச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக மாநில போலிஸ் தலைமை ஆணையர் அயோப் கான் மைதின் பிச்சை கூறினார்.

35 முதல் 64 வயதுக்குட்பட்ட அவர்களில் ஒருவர் தாய்லாந்தைச் சேர்ந்த மாது. கும்பல் தலைவனின் மருமகள் அந்தப் பெண் என்று கூறப்படுகிறது.

அவர்களிடமிருந்து 8 வாகங்னங்கள், 23,190 ரிங்கிட் ரொக்கம், 178,640 ரிங்கிட் மதிப்பிலான நகைகளும் கைப்பற்றப்பட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!