வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட முகைதீன் யாசின்

மலே­சி­யப் பிர­த­மர் அலு­வ­ல­கத்­தில் இம்­மா­தம் 3ஆம் தேதி­யன்று கொவிட்-19 தொடர்­பாக சிறப்பு அமைச்­ச­ரவை கூட்­டம் நடை­பெற்­றது.

இதில் மலே­சி­யப் பிர­த­மர் முகை­தீன் யாசி­னும் மற்ற அமைச்­சர்­களும் கலந்­து­கொண்­ட­னர்.

கூட்­டத்­தில் கலந்­து­கொண்ட பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் டாக்­டர் ஸுல்­கி­ஃப்லி முகம்­மது அல்-பக்­ரிக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது பிறகு தெரி­ய­வந்­தது.

இதை­ய­டுத்து, பிர­த­மர் முகை­தீன் யாசின் வீட்­டி­லேயே தம்­மைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொண்­டுள்­ளார்.

“சுகா­தார அமைச்­சின் ஆலோ­ச­னைப்­படி அடுத்த 14 நாட்களுக்கு எனது வீட்­டி­லேயே என்­னைத் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்­வேன்.

“இருப்­பி­னும், இது எனது பணிக்கு இடை­யூ­றாக இருக்­காது. அர­சாங்­கப் பணி­கள் தொட­ரும். வீட்­டி­லி­ருந்­த­வாறு எனது பொறுப்­பு­களை நிறை­வேற்­று­வேன். தேவைப்­பட்­டால் காணொளி மூலம் மெய்­நி­கர் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­து­வேன்,” என்று திரு முகை­தீன் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக முன்­னாள் மலே­சி­யப் பிர­த­மர் நஜிப் ரசாக் 14 நாட்­க­ளுக்­குத் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்.

இதன் கார­ண­மாக இரண்டு வார இடை­வெ­ளிக்­குப் பிறகு நேற்று தொடங்­க­வி­ருந்த 1எம்­டிபி வழக்கு விசா­ரணை ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட ஒரு­வ­ரு­டன் நஜிப் நெருங்­கிய தொடர்­பில் இருந்­ததை அடுத்து அவர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக அவ­ரது வழக்­க­றி­ஞர் தெரி­வித்­தார்.

அண்­மை­யில் சாபா மாநி­லத்­தில் சட்­ட­மன்­றத் தேர்­தல் நடை­பெற்­றது. தேர்­தல் பிர­சா­ரத்­துக்­காக நஜிப் அங்கு சென்­றி­ருந்­தார். அப்­போது நஜிப்­பும் சில அமைச்­சர்­களும் இருந்த இடத்­தில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட சிலர் இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

“தேர்­தல் பிர­சா­ரத்­தின்­போது பாது­காப்­பான தூர இடை­வெளி, முகக்­க­வ­சம் அணி­தல் ஆகிய முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை முழு­மை­யா­கக் கடைப்பிடிப்­பது சாத்­தி­ய­மல்ல,” என்று நஜிப்­பின் வழக்­க­றி­ஞர் தெரி­வித்­தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!