சாபாவின் புதிய முதல்வருக்கு கொரோனா கிருமித்தொற்று

மலே­சி­யா­வின் சாபா மாநி­லத்­தின் புதிய முதல்­வர் ஹாஜிஜி நூருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. சாபா தலை­ந­கர் கோத்தா கின­பா­லு­வில் உள்ள குவீன் எலி­ச­பெத் மருத்­து­வ­ம­னை­யில் அவர் சிகிச்சை பெற்று வரு­வ­தாக மலே­சிய ஊட­கம் தெரி­வித்­தது.

சாபா­வில் அண்­மை­யில் நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்­கான பிர­சா­ரத்­தில் மலே­சி­யா­வின் பல மூத்த அர­சி­யல்­வா­தி­கள் அவ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­னர். திரு ஹாஜி­ஜிக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தால் அவர்­களும் பாதிக்­கப்­ப­டக்­கூ­டும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.

65 வயது திரு ஹாஜி­ஜி­யின் உடல்­நிலை சீராக இருப்­ப­தாக அவ­ரது மக்­கள் தொடர்­புச் செய­லா­ளர் திரு எஃபெண்டி முகம்­மது சுனோ தெரி­வித்­தார்.

திரு ஹாஜி­ஜி­யும் அவ­ரது மனை­வி­யும் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக சாபா­வில் பர­வ­லா­கப் பேசப்­பட்­ட­தும் அவ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருக்­கும் செய்தி அதி­கா­ர­பூர்­வ­மாக வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

சாபா சட்­ட­மன்­றத் தேர்­தல் பிர­சா­ரத்­தில் கலந்­து­கொண்ட மலே­சி­யப் பிர­த­மர் முகை­தீன் யாசி­னும் அமைச்­சர்­கள் மற்­றும் துணை அமைச்­சர்­களும் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­தி­யுள்­ள­னர்.

முன்­னாள் மலே­சி­யப் பிர­த­ம­ரும் 1எம்­டிபி மோசடி வழக்கை எதிர்­நோக்­கு­ப­வ­ரு­மான நஜிப் ரசாக்­கும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்.

சாபா­வி­லி­ருந்து மலே­சிய தீப­கற்­பத்­துக்­கும் சர­வாக் மாநி­லத்­துக்­கும் தேர்­தல் பிர­சா­ரத்­தில் கலந்­து­கொண்ட அர­சி­யல்­வா­தி­கள் கொண்டு வந்­து­விட்­ட­தாக மலே­சி­யர்­க­ளி­டையே கொந்­த­ளிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

கடந்த ஒரு வார­மாக கெடா திரங்­கா­னு­வி­லும் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­போர் எண்­ணிக்கை வெகு­வாக அதி­க­ரித்­துள்­ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!