சாலையின் நடுவே பெண்ணை அடித்து, உதைக்கும் காணொளி; அடித்த ஆடவரை தேடும் போலிஸ்

மலேசியாவின் பண்டான் ஜெயாவில் மாது ஒருவரை மீண்டும் மீண்டும் ஓர் ஆடவர் உதைத்து, அடித்து துன்புறுத்துவதைக் காட்டும் காணொளியின் தொடர்பில், சம்பவத்தில் தொடர்புடைய ஆடவரை போலிசா ர்தேஎடி வருகின்றனர்.

அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பெரிதளவில் பரவியதையடுத்து, அது தொடர்பான புகாரை பண்டான் இண்டா காவல் நிலையத் தலைவரிடமிருந்து தங்களது குழு புகாரைப் பெற்றதாக அம்பாங் ஜெயாவின் துணை போலிஸ் தலைமை கண்காணிப்பாளர் முகமது அஸாம் இஸ்மாயில் கூறினார்.

பண்டான் ஜெயாவில் உள்ள உணவகம் ஒன்றின் முன்பாக ஓர் ஆடவர் ஒரு பெண்ணை மீண்டும் மீண்டும் உதைப்பது, கன்னத்தில் அறைவது, தாக்குவது, கடுஞ்சொற்களால் சாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது அந்த ஒன்றரை நிமிட காணொளியில் பதிவாகியுள்ளது.

ஆனால், அந்தக் காணொளியில் தாக்கப்பட்டவர் இதுவரை போலிசில் புகார் அளிக்கவில்லை என்று கூறும் போலிசார், சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணையும் ஆடவரையும் தேடி வருவதாகக் குறிப்பிட்டனர்.

இந்தப் பிரச்சினையில் தொடர்புடைய இருவரும் உறவினர்களாக இருக்கலாம் என்று போலிசார் குறிப்பிட்டனர்.

வேண்டுமென்றே காயம் விளைவிப்பதற்கான குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 323, குடும்ப வன்முறை சட்டத்தின் 18 (a) பிரிவு, தொடர்புகள் மற்றும் பல்லூடகச் சட்டப் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!