அன்வார் கூட்டணித் தலைவர்களுடனான மாமன்னரின் சந்திப்பு இப்போதைக்கு இல்லை

அன்­வார் இப்­ரா­கிம் ஆத­ரவு கூட்­ட­ணித் தலை­வர்­க­ளு­டான சந்­திப்பை மாமன்­னர் ஒத்­தி­வைத்­தி­ருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

தங்­க­ளைத் தனித்தனி­யாக சந்­திக்க அரண்­ம­னை­யில் இருந்து அழைப்பு வந்­த­தாக எதிர்த்­த­ரப்பு ஜன­நா­யக செயல் கட்சி தலை­மைச் செய­லா­ளர் லிம் குவான் இங்­கும் அமானா கட்­சி­யின் தலை­வர் முக­மது சபு­வும் கூறி­னர். அக்­டோ­பர் 14 (நேற்று), அக்­டோ­பர் 22 ஆகிய தேதி­களில் அந்­தச் சந்­திப்­பு­கள் நிக­ழ­வி­ருந்­தன.

ஆனால், தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரி­லும் சிலாங்­கூர் மாநி­லத்­தி­லும் புதிய இரு­வார நட­மாட்­டக் கட்­டுப்­பாடு நேற்று முதல் நடப்­புக்கு வரு­வ­தால் எல்லா சந்­திப்­பு­க­ளை­யும் மாமன்­னர் ஒத்தி வைத்­தி­ருப்­ப­தாக அரண்­ம­னை­யின் மூத்த அதி­காரி அக­மது ஃபாடில் ஷம்­சு­தின் அறிக்கை வெளி­யிட்­டுள்­ளார்.

கட்­டுப்­பா­டு­கள் விலக்­கப்­பட்ட பின்­னர் சந்­திப்­பு­க­ளுக்­கான புதிய தேதி முடிவு செய்­யப்­படும் என்­றும் அந்த அறிக்கை குறிப்­பிட்­டது. சந்­திப்பு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது குறித்து தங்­க­ளுக்கு அரண்­மனை அறி­வித்­த­தாக இரு தலை­வர்­களும் கூறி­னர்.

ஆயி­னும் மாமன்­ன­ரைச் சந்­திக்க அழைக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­படும் மலே­சிய இந்­தி­யர் காங்­கி­ர­சின் தலை­வர் எஸ்.ஏ.விக்­னேஸ்­வ­ரன் அச்­சந்­திப்பு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது குறித்த அறி­விப்பு தமக்கு வர­வில்லை என்­றார்.

ஆளும் கூட்­ட­ணிக்கு அம்னோ மிரட்­டல்

இதற்­கி­டையே, மலே­சிய அர­சி­ய­லில் மற்­றொரு திருப்­பு­மு­னை­யாக ஆளும் கூட்­ட­ணி­யில் சலச­லப்பு கிளம்பி உள்­ளது.

இது­நாள் வரை பிர­த­மர் முகை­தீன் யாசின் அர­சாங்­கத்­திற்கு பக்­க­ப­ல­மாக தோள்­கொ­டுத்து வரும் அம்னோ தமது ஆத­ரவை தொட­ரு­வது பற்றி ஓர் அறி­விப்பை வெளி­யிட்டு உள்­ளது.

ஆளும் பெரிக்­கத்­தான் நேஷ­னல் கூட்­ட­ணிக்­கான ஆத­ரவை விலக்­கு­வது குறித்து அம்னோ பரி­சீ­லித்து வரு­வ­தாக அதன் செய்­தித்­தொ­டர்­பா­ளர் அக­மது மஸ்­லான் தெரி­வித்து உள்­ளார்.

“முகை­தீன் அர­சை ஆத­ரிக்க வேண்­டு­மெ­னில் சில நிபந்­த­னை­களை அம்னோ முன்வைக்கும்.

“அதனை எழுத்­து­பூர்­வ­மாக ஒப்­புக்­கொண்­டால் அம்னோ ஆத­ரவு தொட­ரும்,” என அவர் செவ்­வாய்க்­கி­ழமை பின்­னே­ரத்­தில் தெரி­வித்­தார். மலே­சிய எதிர்க்­கட்­சித் தலை­வர் அன்­வார் இப்­ரா­கிம் அரண்­ம­னை­யில் மாமன்­ன­ரைச் சந்­தித்­து­விட்டு திரும்­பிய சில மணி நேரங்­களில் அம்னோ இந்த அறி­விப்பை வெளி­யிட்­டது.

மேலும், ஆளும் கூட்­ட­ணியை ஆத­ரிப்­ப­தற்­குப் பதில், பாஸ் கட்­சி­யு­டன் இணைந்து முவா­ஃப­கத் நேஷ­னல் என்­னும் மலாய் சார்பு கூட்­ட­ணி­யைப் பிர­ப­லப்­ப­டுத்­த­வும் அர­சி­யல் கூட்­ட­ணி­யாக அத­னைப் பதிவு செய்­ய­வும் அம்னோ ஏற்­பாடு செய்­யும் என்­றும் திரு மஸ்லான் தெரி­வித்­தார்.

2018 மே மாதம் நடை­பெற்ற பொதுத் தேர்­த­லில் தோல்­வி­யுற்று ஆட்­சி­யைப் பறி­கொ­டுத்த அம்னோ தற்­போ­தைய அர­சாங்­கத்­தின் தூணாக விளங்கி வரு­கிறது. அது தனது ஆத­ரவை விலக்­கிக் கொண்­டால் முகை­தீன் அரசு கவி­ழும் அபா­யம் உள்­ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!