‘எம்.பி.க்கள் ஆதரவு விவகாரம் போலிசுக்கு தேவையற்றது’

பெரும்­பா­லான நாடாளுமன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவு தமக்கு இருப்­ப­தா­க­வும் தம்மை பிர­த­ம­ராக நிய­மிக்க வேண்­டும் என்­றும் மலே­சிய மாமன்­னரை அண்­மை­யில் சந்­தித்­துக் கேட்­டுக்­கொண்­டார் கெஅ­டி­லான் கட்­சித் தலை­வர் அன்­வார் இப்­ரா­ஹிம்.

121 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவு தமக்கு இருப்­ப­தாக அன்­வார் கூறி­யதை அடுத்து, மலே­சி­யா­வில் உள்ள பல அர­சி­யல் கட்சி கள் போலி­சில் புகார் செய்­த­ன.

இது­கு­றித்து அன்­வா­ரி­டம் மலே­சிய போலிஸ் நேற்று விசா­ரணை நடத்­தி­யது.

போர்ட் டிக்­சன் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான அன்­வாரிடம் புக்­கிட் அமா­னில் உள்ள போலிஸ் தலை­மை­ய­கத்­தில் விசா­ரணை நடத்­தப்­பட்­டது.

கிட்­டத்­தட்ட இரண்டு மணி நேர விசா­ர­ணைக்­குப் பிறகு போலிஸ் தலை­மை­ய­கத்­தை­விட்டு அன்­வார் வெளி­யே­றி­னார்.

தலை­மை­ய­கத்­துக்கு வெளியே காத்­துக்­கொண்­டி­ருந்த செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அவர் பேசி­னார்.

“போலி­சுக்கு நான் என் முழு ஒத்­து­ழைப்­பைத் தந்­துள்­ளேன். அர­சி­யல் பலத்­தைப் பயன்­ப­டுத்தி எனக்­குத் தொல்லை கொடுக்­கி­றார்­கள். எனக்­குத் தொல்லை கொடுக்­கச் சொல்லி அதி­கா­ரத்­தில் இருப்­ப­வர்­கள் போலி­சுக்கு உத்­த­ர­விட்­டுள்­ள­னர்.

“எனக்கு ஆத­ரவு வழங்­கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­களை போலி­சார் கேட்­ட­னர். இது அவர்­க­ளுக்­குத் தேவை­யற்­றது. எனக்­கும் மாமன்­ன­ருக்­கும் இடையே நடை­பெற்ற உரை­யா­டல் பற்றி கேள்வி எழுப்­பு­வது நியா­ய­மற்­றது,” என்­றார் அன்­வார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!