சுடச் சுடச் செய்திகள்

மலேசியாவில் 10,000 போலிசார் தனிமைப்படுத்தப்பட்டனர்

மலே­சி­யா­வில் உச்சக் ­கட்­டத்தை எட்­டி­யுள்ள கிருமித் ­தொற்று முன்­க­ளப் பணி­யா­ளர்­ளை­யும் பதம் பார்த்துள்ளது.

போலி­சா­ர் மற்றும் சுகா­தா­ரத் துறை ஊழி­யர்­களில் பலர் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலை­யில் 10,000க்கும் மேற்­பட்ட போலி­சார் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்­களில் 200க்கும் மேற்­பட்ட போலி­சா­ருக்கு கிரு­மித்­தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டு உள்ளது.

பெருமளவு போலிசார் கிரு­மித்­தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் பாது­காப்­புப் பணி­யில் மிகப் பெரிய தொய்வு ஏற்­படும் என அஞ்சப்படு கிறது.

போலிஸ் படைக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்­பு­களை உறு­திப்­ப­டுத்­திய உள்­துறை அமைச்­சர் ஹம்சா சைனூ­தீன், மனி­த­வ­ள­மும் அவர்­க­ளு­டைய பணி­யும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க தெரி­வித்­தார்.

போலிஸ் வேலை­யின் தன்மை கார­ண­மாக அவர்­கள் கிரு­மித் தொற்­றால் அதி­கம் பாதிக்­கப்­ப­டு­வதாக அவர் சொன்­னார்.

“பிப்­ர­வரி மாதத் தொடக்­கத்­தில் கிரு­மிப்பர­வல் ஏற்­பட்­டது.

“அதன் பிறகு ஏழே மாதங்­களில் 10,000க்கும் மேற்­பட்­டோர் பாதிக்­கப்­பட்­ட­னர். தற்­போ­தைய 3வது கிரு­மிப்­ப­ர­வல் அலை­யில் இரண்டே வாரங்­களில் 11,000 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்,” என்று அமைச்­சர் சொன்னார்.

மலே­சி­யர்­கள் அனைவரும் கிருமித்தொற்றுக்கு எதிராக இணைந்து போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், இதை அரசியலாக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார்.

இதற்கிடையே டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் அவர் முன்கள ஊழியர்களைப் பாராட்டியுள்ளார்.

கொரோனாவுக்கு எதிராக இரவு பகலாகப் போராடி வரும் உங்களை நம்பித்தான் நாடே இருக்கிறது என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை தனிமைப்படுத்தப்பட்ட போலிசாரில் எத்தனை பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்பது தெரியவில்லை.

இன்னும் சோதனை முடிவுகள் வெளி வர வேண்டி உள்ளது.

அதன் பிறகே உண்மை நிலவரம் தெரிய வரும் என்று அரசு தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon