சரவாக்கில் கல்வி நிலையங்கள் மூடல்; ஜோகூரில் நீதிமன்றங்கள் மூடல்

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் சர­வாக் மாநி­லத்­தின் கூச்­சிங் மாவட்­டம் கொவிட்-19 சிவப்பு வட்­டா­ர­மாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. அத­னை­ய­டுத்து அங்­குள்ள 209 கல்வி நிலை­யங்­களை இன்று (அக்.30) முதல் நவம்­பர் 13ஆம் தேதி வரை­யில் மூடு­வ­தற்கு சுகா­தார அமைச்சு உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது. கல்­வி­ய­மைச்­சின் கீழ் இயங்­கும் தொடக்­க­நிலை, உயர்­நி­லைப் பள்­ளி­கள், ஆசி­ரி­யர் பயிற்­சிக் கழ­கம் மற்­றும் கல்­வி­ய­மைச்­சில் பதி­வு­பெற்ற தனி­யார் பள்­ளி­களும் மாண­வர் தங்­கும் விடு­தி­யும் இதில் அடங்­கும் என கல்­வி­ய­மைச்சு ஓர் அறிக்­கை­யின் மூலம் தெரி­வித்­துள்­ளது.

கூட்டாட்சி மண்டலத்தைச் சேர்ந்த லபுவான் பகுதியில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டிருப்பது நவம்பர் 13 வரை தொடரும்.

மாண­வர்­கள் தங்­கள் பாடங்­க­ளை­யும் ஆசி­ரி­யர்­கள் தங்­க­ளுக்­குத் தேவை­யான கற்­பித்­தல் குறித்த விவ­ரங்­க­ளை­யும் கல்­வி­ய­மைச்­சின் இணை­யத்தளத்­தில் இருந்து பதி­வி­றக்­கம் செய்­து­கொள்­ள­லாம் என்­றும் அமைச்சு தெரி­வித்­தது.

கல்வி நிலை­யங்­கள் தங்­கள் நிலை­யத்­தின் கற்­பித்­தல், கற்­றல் நட­வ­டிக்­கை­கள் இணை­யம் வாயி­லாக தொடர்ந்து நடை­பெ­று­வதை உறு­தி­செய்ய வேண்­டும் என்று அமைச்சு தெரி­வித்­தது.

இந்­நி­லை­யில் ஜோகூ­ரில் நீதி­மன்­றத்­தில் மொழி பெயர்ப்­பா­ளர்­கள் இரு­வ­ருக்கு கொவிட்-19 தொற்று இருந்­தது உறு­தி­செய்­யப்­பட்­டதை அடுத்து அங்­குள்ள நீதி­மன்­றங்­களை மூடு­வ­தற்கு ஜோகூர் சட்­டக் கழ­கம் ஆணை பிறப்­பித்து சுற்­ற­றிக்கை அனுப்­பி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!