சுடச் சுடச் செய்திகள்

கொவிட்-19: ஜோகூர் பாரு மாவட்டம் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

ஜோகூர் பாரு மாவட்டத்தில் கடந்த 14 நாட்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40ஐக் கடந்திருப்பதால் அந்த மாவட்டம் சிவப்பு மண்டலமாக நேற்று (அக்டோபர் 29) அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு முயற்சிகள் தீவிரப்படுத்தடும் என ஜோகூரின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் ஆர். வைத்தியநாதன் கூறினார்.

பெரும்பாலும் வீடுகளிலும் வேலையிடங்களிலும் பரவல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிருமித்தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் வீட்டு கண்காணிப்பு ஆணை வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் இன்று தெரிவித்தார்.

நேற்று பதிவான புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் 9 ஏற்கெனவே கிருமித்தொற்று உடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்குப் பதிவானது. ஒன்று மட்டும் மற்ற பரிசோதனைகளில் கண்டறியப்பட்டது.

தற்போது ஜோகூரில் பாயு, கெம்பாஸ், ரின்டிங் என மூன்று கிருமித்தொற்று குழுமங்கள் இருப்பதாக திரு வைத்தியநாதன் கூறினார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon