தமிழ்ப் பள்ளிகளுக்கு நிதி: அமைச்சர் சரவணன் உறுதி

கோலாலம்பூர்: தமிழ்ப் பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் 2021ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் எதுவும் இடம்பெறாததால் மலேசிய இந்தியச் சமூகத்தினர் தங்களது மனக்குறையை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில், கல்வி அமைச்சுக்கு 50 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதன்மூலம் வட்டார மொழிப் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளும் பலனடையும் என்றும் மனிதவள அமைச்சர் எம். சரவணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து மூத்த கல்வி அமைச்சர் டாக்டர் ரட்ஸி ஜிடின் விரைவில் அறிவிப்பார் என்று திரு சரவணன் குறிப்பிட்டார்.

“வழக்கமாக, ஒவ்வோர் ஆண்டும் வரவுசெலவுத் திட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளுக்கென 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும். இம்முறை அத்தகைய அறிவிப்பு எதுவும் இடம்பெறாததற்கு இந்தியச் சமூகத்தினரிடம் இருந்து எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின.

“இதன் தொடர்பில் கல்வி அமைச்சருடனும் நிதி அமைச்சருடனும் பேசினேன். கல்வி அமைச்சுக்கான 50 பில்லியன் ரிங்கிட் நிதியில் தமிழ்ப் பள்ளிகளுக்கான நிதியும் அடங்கும் என்று அவ்விருவரும் என்னிடம் தெரிவித்தனர்,” என்று அமைச்சர் சொன்னார்.

தமிழ்ப் பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதால் இந்தியச் சமூகத்தினர் பொறுமையாக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!