முகைதீனின் வரவுசெலவுத் திட்டத்துக்கு வெற்றி

மலே­சிய பிர­த­மர் முகை­தீன் யாசின் தாக்­கல் செய்த வரவு செல­வுத் திட்­டத்துக்கு நாடாளு­மன்­றம் ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.

அர­சி­யல் நிச்­ச­ய­மற்ற சூழ்­நி­லை­யில் பிர­த­ம­ரின் நிர்­வா­கத்­துக்கு கிடைத்த வெற்­றி­யா­க இது கருதப் ப­டு­கிறது.

வரவு செல­வுத் திட்­டம் 2021 வியப்­பூட்­டும் வகை­யில் குரல் வாக்­கெ­டுப்பு மூலம் நிறைவேறியது.

2வது வாசிப்­பில் ஒரு பிரி­வைக் குறித்து கேட்க குறைந்­தது 15 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவு தேவை. ஆனால் எதிர்க்­கட்­சி­கள் தேவை­யான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ர­வைத் திரட்­டு­வ­தில் தவ­றி­விட்­டன.

இத­னால் அடுத்த கட்­ட­மாக நிதி ஒதுக்­கீடு தொடர்­பான மூன்று வார விவா­தம் நடை­பெ­றும். இதற்கு முன்பு 3வது மற்­றும் இறுதி வாசிப்பை நாடா­ளு­மன்­றம் அங்­கீ­ க­ரிக்க வேண்­டும்.

மொத்த வரவு செல­வுத் திட்­டத்­தின் மதிப்பு 322.5 பில்­லி­யன் ரிங்­கிட்­டா­கும் (S$106 பில்­லி­யன்).

பிர­த­மர் முகை­தீ­னின் நிர்­வா­கத்­தி­னர் வரவு செல­வுத் திட்­டத்தை தாக்­கல் செய்­த­போது ஒற்றை இலக்க நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ­க­ளின் ஆத­ரவு மட்­டுமே அவர்களுக்கு இருந்­தது.

ஆளும் தேசிய கூட்­ட­ணி­யில் அதி­க­மான உறுப்­பி­னர்­க­ளு­டன் இடம்­பெற்­றுள்ள தேசிய முன்­ன­ணி­யும் ஆட்­சி­யைப் பற்றி தொடர்ந்து குறைகூறி வந்ததால் அதன் ஆதரவும் கேள்விக்குறியானது.

இந்த நிலையில் தேசிய முன்­னணி ­நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் நேற்று வரவு செல­வுத் ­திட்­டத்­துக்கு ஒட்­டு­மொத்த ஆத­ரவை அளித்­த­னர். ஆனால் வரவு செல­வுத் திட்­டத்­தில் தங்­க­ளு­டைய கோரிக்­கை­க­ளை­யும் சேர்க்க வேண்­டும் என்று சில நாட்­க­ளுக்கு முன்பு அது நிபந்­தனை விதித்­தி­ருந்­தது.

இந்த நிலை­யில் நிதி அமைச்­சர் ஸஃப்ருல் அப்­துல் அஸிஸ், கூட்­ட­ணிக் கட்­சி­கள் மற்­றும் எதிர்க்­கட்­சி­க­ளின் கோரிக்­கை­க­ளை நிறை வேற்றும் வகையில் வரவு செல­வுத் திட்­டத்­தில் சில மாற்­றங்­களைச் செய்­தி­ருந்­தார்.

கடன் தவ­ணையை குறிப்­பிட்ட காலத்­திற்கு ஒத்­தி­வைத்­தல், ‘இபி­எஃப்’ எனும் வருங்­கால வைப்பு நிதி­யி­லி­ருந்து நிதி எடுப்­ப­தற்­கான தகு­தியைத் தளர்த்­து­தல், சாபா மற்­றும் முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்கு அதிக அளவு உதவிகள் வழங்­கு­தல் உள்­ளிட்ட கோரிக்­கை­கள் இவற்­றுள் அடக்­கம். முன்னதாக மாமன்னர் அப்துல்லா அஹமது ஷா, கிருமித்தொற்று பிரச்சினையை நாடு எதிர்நோக்கியுள்ள வேளையில் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவு அளித்து அரசாங்கத்துக்கு உதவுமாறு உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!