எட்டு மாதங்களாக காரில் வசித்த குடும்பத்திற்கு வாடகை வீடு

ஜார்ஜ்டவுன்: இவ்வாண்டு ஏப்ரலில் தமது வீடு தீக்கிரையானதால் கடந்த எட்டு மாதங்களாக மனைவி, மூன்று பிள்ளைகளுடன் காரில் வசித்து வந்த பாதுகாவலரான திரு கணேஷ் சௌந்தராஜாவுக்கு பினாங்கு மாநில அரசாங்கம் தற்காலிக அடுக்குமாடி குடியிருப்பு வாடகை வீட்டை வழங்கியுள்ளது.

மாநில அரசாங்கத்தின் வீடமைப்புக் குழுவுக்கு பொறுப்பு வகிக்கும் ஆட்சிக் குழு உறுப்பினரான திரு ஜக்ஜிட் சிங் வீட்டுச் சாவியை கணேஷிடம் இன்று வழங்கினார். 33 வயதான திரு கணேஷ், இவரது மனைவி, எட்டு மாதம் முதல் ஆறு வயதுடைய மூன்று குழந்தைகளுடன் வாடகை வீட்டில் குடியேறினர். எதிர்பாராத நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தற்காலிக அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு 90 ரிங்கிட் வாடகை நிர்ணயிக்கப்பட்டாலும், புதிய வீடு தேடும்வரை இலவசமாக தங்கி இருப்பதற்கு கணேஷ் குடும்பத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பழைய ‘புரோட்டோன்’ ரக காரில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த கணேஷ் குடும்பத்திற்கு இதன்வழி விடியல் பிறந்துள்ளது.அரசு சார்பற்ற இயக்கம் ஒன்றின் மூலம் இவரது விவகாரம் ஊடகங்களில் வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த கொடைவள்ளல் இபிட் லியூ என்பவர் கணேஷ் குடும்பத்திற்கு வீட்டிற்குத் தேவையான மின்சாரப் பொருட்களையும் இதர வீட்டு உபயோகப் பொருட்களையும் வாங்கித் தந்ததாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!