நேரடி வகுப்புகளுக்கு அழைப்பு: மலேசிய மாணவர்கள் அதிருப்தி

வகுப்­பு­க­ளி­லும் தேர்­வு­க­ளி­லும் நேர­டி­யா­கப் பங்­கேற்க மாண­வர்­கள் தங்­க­ளது கல்­லூ­ரிக்­குத் திரும்ப வேண்­டும் என மலே­சிய மெட்­ரி­கு­லே­ஷன் துறை விடுத்த அறி­விப்­புக்கு மாண­வர்­கள், பெற்­றோர்­கள் மத்­தி­யில் எதிர்ப்பு கிளம்பி உள்­ளது.

அந்த உத்­த­ரவை ரத்து செய்து மாற்று வழி காணு­மாறு கல்வி அமைச்­சைக் கேட்­டுக்­கொள்­ளும் இணையப் படிவத்தில் ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் கையெழுத் திட்டு வருகின்றனர். சுமார் 11,600 பேர் கையெழுத்திட்டுள்ளதாக நேற்­றுக் காலை­யில் வெளி­யான தக­வல்­ தெரிவித்தது.

மலே­சியா முழு­வ­தும் கொவிட்-19 பர­வல் சம்­ப­வங்­கள் கடந்த இரு மாதங்­க­ளாக நான்கு இலக்­கத்­தில் பதி­வாகி வரு­வ­தால் மாண­வர்­கள் ஒன்­று­கூ­டும் போது அந்த எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கக்

­கூ­டும் என்ற அச்­சம் மாண­வர்­கள் மற்­றும் பெற்­றோர்­கள் மத்­தி­யில் நில­வு­கிறது. கடந்த சனிக்­கி­ழமை ஆக அதி­க­மாக 2,335 ­தொற்று சம்­ ப­வங்­கள் மலே­சி­யா­வில் பதி­வா­யின.

கையெ­ழுத்­துக்கு விடப்­பட்ட மனு­வில், கல்வி அமைச்­சின் மெட்­ரி­கு­லே­ஷன் துறை வெளி­யிட்ட உத்­த­ரவு ‘நியா­ய­மற்­றது’ என்று குறிப்­பி­டப்­பட்டு உள்­ளது. வெவ்­வேறு மாநி­லங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­கள் ஒரே வகுப்­பில் ஒன்­றாக சேரும்­போது கிரு­மிப் பர­வல் அபா­யம் அதி­க­மா­கும் என்­றும் மனு வாச­கங்­கள் தெரி­வித்­தன.

பல்­க­லைக்­க­ழ­க படிப்­புக்கு முந்திய ஓராண்டு அல்­லது ஈராண்டு புகு­முக வகுப்பு ஆயத்த பாடத் திட்­டங்­களை மெட்­ரி­கு­லே­ஷன் துறை வழங்கி வரு­கிறது. இதற்­கான தேர்­வு­கள் அடுத்த வாரம் ஜன­வரி 6 முதல் 13 வரை நடக்க உள்­ள தாக அத்­து­றை­யின் அதி­காரி ஒரு­வர் கூறி­னார்.

மேலும் வரும் திங்­கட்­கி­ழமை (ஜன­வரி 4) கல்­லூ­ரி­கள் திறக்­கப்

­ப­டு­வ­தா­க­வும் அதற்­கான ஏற்­பா­டு­ கள் சுகா­தார அமைச்­சின் கொவிட்-19 தொடர்­பான விதி­மு­றை­க­ளுக்கு இணங்க செய்­யப்­பட்டு உள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!