கோலாலம்பூரில் 200 கிலோ கஞ்சா பறிமுதல்; கடத்தல்காரர்கள் இருவர் கைது

மலே­சி­யத் தலைந­கர் கோலா­லம்­பூ­ரில் 200 கிலோ­வுக்­கும் அதி­க­மான கஞ்சா பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளது.

தக­வல் கிடைத்து அதி­ரடி நட­வ­டிக்­கை­யில் இறங்­கிய கோலா­லம்­பூர் போலி­சார் போதைப்­பொ­ருள் கடத்­தல்­கா­ரர்­கள் எனச் சந்­தே­கிக்­கப்­படும் இரு­வ­ரைக் கைது செய்­த­னர். கடந்த திங்­கட்­கி­ழமை மாலை 5.40 மணி அள­வில் கம்­போங் பத்து மூடா­வில் 49 வயது ஆட­வர் கைது செய்­யப்­பட்­டார்.

அவ­ரி­டம் இருந்த போதைப்­பொ­ருள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. அதை­ய­டுத்து, சாலை­யோ­ரம் நிறுத்தி வைக்­கப்­பட்ட இரண்டு கார்­களை போலி­சார் சோத­னை­யிட்­ட­னர்.

அதி­லி­ருந்த 14.4 கிலோ கஞ்­சா­வும் 1,070 ரிங்­கிட் ரொக்­க­மும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

அதைத் தொடர்ந்து நடை­பெற்ற விசா­ர­ணை­யில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த வாக­னம் ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

அதில் இருந்த 187.4 கிலோ கஞ்­சாவை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர்.

இதை­ய­டுத்து, கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு 9.53 மணி அள­வில் தாமான் தேசா பெட்­டா­லிங் குடி­யி­ருப்­புப் பேட்­டை­யில் 36 வயது ஆட­வர் கைது செய்­யப்­பட்­டார். அவ­ரி­டம் விசா­ரணை நடத்­திய பிறகு சுங்கை பிசி­யில் உள்ள குடி­யி­ருப்­புப் பேட்­டை­யில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த வாக­னத்­துக்­குள் இருந்த 63.7 கிலோ கஞ்­சாவை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர்.

அதி­ரடி நட­வ­டிக்­கை­யின்­போது மூன்று வாக­னங்­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்­ட­தாக போலி­சார் தெரி­வித்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!