வருமானம் இழந்து தவிப்போருக்கு இலவச உணவு வழங்கும் பினாங்கு உணவகம்

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் விதமாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும் நிலையில் பலர் வேலை இழந்து, வருமானம் இன்றி தவிக்கும் சூழலில், சிரமப்படுவோருக்கு ஒரு வேளை உணவு கொடுத்து உதவும் உன்னதப் பணியைச் செய்து வருகிறது மலேசியாவின் பினாங்கில் உள்ள ‘பிக் பாஸ் பனானா லீஃப்’ உணவகம்.

தினமும் 100 பொட்டலம் உணவை வழங்கி வருகிறது அந்த உணவகம்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும் 26ஆம் தேதி வரை தொடர்ந்து 100 உணவுப் பொட்டலங்களை வழங்க இருப்பதாக அந்த உணவகத்தின் உரிமையாளர் எம். மோகனசுந்தரம், 37, தெரிவித்தார்.

ஒருவேளை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டால், அப்போதும் தொடர்ந்து 100 பேருக்கு உணவு வழங்கப்போவதாகக் குறிப்பிட்டார் அவர்.

இதற்கு முன்பு மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருந்தபோதும் எளியோருக்கு இந்த உணவகம் உணவு வழங்கியதாகக் கூறப்பட்டது.

கடையில் 12 ஊழியர்களை வேலைக்கு வைத்திருக்கும் திரு மோகனசுந்தரம், தினமும் 10 கிலோ அரிசி, 100 மீன்கள், 100 கோழி முட்டைகள், 100 கோழித்துண்டுகள், காய்கறிகள் போன்றவற்றை இலவசமாக உணவு வழங்குவதற்காக ஒதுக்கி வைக்கிறார்.

சில நேரங்களில் அந்த உணவகத்திலிருந்து இலவசமாக உணவு பெறுவதாகக் குறிப்பிட்ட 65 வயது கோ செங் வெங் எனும் ஆடவர், “நான் தனியாக வசிக்கிறேன் என்பதும் நான் ஏழை என்பதும் திரு மோகனசுந்தரத்துக்குத் தெரியும்,” என்றார்.

இந்தக் கொள்ளைநோய்ச் சூழலில் ஏழ்மையில் வாடுவோருக்கு நம்மால் ஆன உதவியைச் செய்ய விரும்புவதாகக் கூறிய திரு மோகனசுந்தரத்தைப் பாராட்ட வேண்டும் என்று 51 வயது இல்லத்தரசி புஷ்பமலர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!