சிலாங்கூரில் தொற்று சூழலை சமாளிக்க உதவித் திட்டம்

மலே­சி­யா­வின் சிலாங்­கூர் மாநில அர­சாங்­கம், தற்­போது எதிர்­நோக்­கும் கொவிட்-19 நெருக்­க­டிச் சூழ­லைச் சமா­ளிப்­ப­தற்கு 73.877 மில்­லி­யன் ரிங்­கிட் ஊக்­கத்­தொ­குப்­புத் திட்­டத்தை அறி­வித்­துள்­ளது.

சிலாங்­கூர் மாநில மக்­க­ளின் நல­னைப் பேணிக்­காக்க, நம்­மி­டம் உள்ள அனைத்து வளங்­களும் பயன்­ப­டுத்­தப்­படும் என்று இந்­தத் திட்­டத்தை அறி­வித்த அம்­மா­நில முதல்­வர் அமி­ரு­தின் ‌ஷாரி கூறி­னார். இந்த ஊக்­கத்­தொ­குப்­புத் திட்­டத்­தின் தொகை­யில் இருந்து 7.177 மில்­லி­யன் ரிங்­கிட் தொகை ‘நம் சிலாங்­கூர் ஊக்­க­தொ­கைத் தொகுப்­புத் திட்­டம்’ மூலம் 762 மாண­வர்­க­ளுக்­குக் கடன் அளிப்­ப­தற்­காக சிலாங்­கூர் அறக்­கட்­ட­ளைக்கு அளிக்­கப்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 சோத­னைத் திட்­டத்­திற்­காக 6 மில்­லி­யன் ரிங்­கிட் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் சுமார் 50,000 பேர் பய­ன­டை­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

எளி­தில் நோய்த்­தொற்று பீடிக்­கும் ஆபத்து உள்ள முதி­யோர்­க­ளுக்­கும் முதி­யோர் இல்­லங்­களில் வசிப்­போ­ருக்­கும் இத்­திட்­டத்­தின் மூலம் உத­வி­ய­ளிக்­கப்­படும். அத்­து­டன் சமூ­கத்­தில் கிருமி பர­வா­மல் இருப்­பதை உறு­தி­செய்­யும் வகை­யில் சமூ­கத்­தில் கொரோனா சோதனை முடுக்­கி­வி­டப்­படும்.

இது­வ­ரை­யி­லும் சமூ­கத்­தில் 19,976 பேருக்கு இல­வ­ச­மாக கொவிட்-19 சோதனை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக திரு அமி­ரு­தின் தெரி­வித்­தார். இந்­தத் திட்­டத்­தின் வாயி­லாக 9,822 மருத்­து­வத்­துறை முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் மற்­றும் நடப்­பில் உள்ள நட­மாட்­டக் கட்­டுப்­பாட்­டைக் கண்­கா­ணிக்­கும் பணி­யில் இருக்­கும் காவல்­து­றை­யி­னர், இரா­ணு­வத்­தி­னர் ஆகி­யோ­ருக்கு உணவு வழங்­கு­வ­தற்­காக 3 மி ரிங்­கிட் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

சிலாங்­கூ­ரில் கொவிட்-19 புதிய தொற்று எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கிறது. இந்­நி­லை­யில் குறைந்த பாதிப்­புள்ள நோயா­ளி­களை மருத்­து­வ­ம­னை­யில் தங்க வைப்­ப­தா­லும் அங்கு அவர்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­து­வ­தா­லும் உதவி தேவைப்­படும் நோயா­ளி­கள் காத்­துக்­கி­டக்க நேரி­டு­கிறது என்று அவர் கவலை தெரி­வித்­தார்.

இந்த நெருக்­கடி காலத்­தில் இயன்­ற­வரை மக்­க­ளின் சுமை­யைக் குறைப்­ப­தற்­காக 100,000 வெள்ளி சிறப்­புத் தொகை ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தத் தொகை 56 தொகு­தி­க­ளுக்­குப் பிரித்து அளிக்­கப்­படும். இதன்­மூ­லம் அந்­தந்­தத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மக்­க­ளின் அடிப்­ப­டைத் தேவை­யான அரிசி, சமை­யல் எண்­ணெய், மாவு, டின்­னில் அடைக்­கப்­பட்ட உணவு மற்­றும் இதர தேவை­க­ளைப் பூர்த்தி செய்­ய­லாம் என்று அவர் கூறி­னார்.

மேலும் மக்­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் 50,000 ரிங்­கிட் வழங்­கப்­படும் என்­றும் திரு அமி­ரு­தின் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!