தைப்பூச விடுமுறை ரத்து: கெடாவில் அரசியல் உரசல்

கெடா மாநி­லத்­தில் தைப்­பூ­ச சிறப்பு விடு­முறை ரத்து செய்­யப்­பட்­ட­தற்கு பல­த­ரப்­பி­ல் இருந்தும் அதி­ருப்தி கிளம்பி உள்­ளது.

அந்த மாநி­லத்­தில் பாஸ் கட்சி ஆட்­சிப் பொறுப்­பில் இருப்­ப­தால் இனி எப்­போ­தும் அங்கு தைப்­பூச விடு­முறை இருக்­காது என்று பினாங்கு மாநில இரண்­டாம் துணை முத­ல­மைச்­சர் டாக்­டர் பி.ராம­சாமி தெரி­வித்து உள்­ளார். வரும் 28ஆம் ேததி கொண்­டா­டப்­பட இருக்­கும் தைப்­பூ­சத் திரு­வி­ழா­வை­யொட்டி மலே­சி­யா­வின் பல மாநி­லங்­களில் விடு­முறை விடப்­ப­டு­வது வழக்­கம்.

குறிப்­பாக, கெடா மாநி­லத்­தில் கடு­மை­யான முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தன் பய­னாக 2013ஆம் ஆண்டு முதல் அங்கு சிறப்பு விடு­முறை அளிக்­கப்­பட்டு வரு­வ­தாக திரு ராம­சாமி குறிப்­பிட்­டார்.

“கெடா­வில் எத்­த­னையோ போராட்­டங்­க­ளுக்­குப் பின்­னர் பெறப்­பட்ட தைப்­பூச சிறப்பு விடு­முறை ரத்து செய்­யும் அறி­விப்­பா­னது கண்­ட­னத்­து­க்கு­ரி­யது,” என மலே­சிய இந்­தி­யர் காங்­கி­ரஸ் (மஇகா) தேசிய தலை­வர் விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

தைப்­பூச சிறப்பு விடு­முறை ரத்து செய்­யப்­பட்­டது அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­து­வ­தாக மலே­சிய இந்து சங்­கத் தலை­வர் ஆர்.எஸ்.மோகன் ஷான் கூறி­யுள்­ளார். தைப்­பூச வழி­பா­டு­களை இவ்­வாண்டு வீட்­டி­லேயே மேற்­கொள்ள இந்­தி­யர்­கள் தயா­ரா­கி­யுள்­ள­தால் விடு­முறை அவர்­க­ளுக்கு உறு­து­ணை­யாக இருந்­தி­ருக்­கும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

மலே­சிய சீனர் சங்­க­மும் கெடா மாநில முடிவை எதிர்த்துள்­ளது. இவ்­வாறு செய்­தி­ருப்­பது சிறு­பான்மை மக்­களின் உரி­மை­களை அவ­ம­திப்­ப­தா­கும் என்று அதன் துணைத் தலை­வர் டான் டெய்க் செங் நேற்று தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டார். தைப்­பூச பொது

­வி­டு­மு­றையை ரத்து செய்ய நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ர­வைக் கார­ணம் காட்­டு­வது நியா­ய­மற்ற செயல் என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார். தைப்­பூச விழா ரத்து என்­ப­தற்­கும் பொது விடு­முறை ரத்து என்­ப­தற்­கும் பெரிய வித்­தி­யா­சம் இருப்­பதை உணர மாநில அர­சாங்­கம் தவ­றி­விட்­ட­தாக திரு டான் கூறி­யுள்­ளார்.

இருப்­பி­னும் இந்த எதிர்ப்­புக­ளுக்கு கெடா மாநில முத­ல­மைச்­சர் முகம்­மது சனுசி தரப்­பிலிருந்து பதி­ல­ளிக்­கப்­பட்டு உள்­ளது. பொது சுகா­தா­ரப் பாது­காப்­புக் கார­ணங்­க­ளுக்­கா­கவே பொது விடு­முறை ரத்து செய்­யப்­பட்டு உள்­ளதை எதிர்த்­த­ரப்­பி­னர் புரிந்­து­கொள்­ள­வில்லை என திரு சனு­சி­யின் அர­சி­யல் செய­லா­ளர் அஃப்னான் ஹமிமி தைப் தெரி­வித்து உள்­ளார்.

கெடா மாநி­லத்­தைக் கேள்வி கேட்­கும் கட்­சி­கள் தைப்­பூ­சத்­திற்கு இது­வரை பொது­வி­டு­முறை அறி­விக்­காத ஏழு மாநி­லங்­களை ஏன் குறை­கூ­ற­வில்லை என்று குறிப்­பிட்­டுள்ள அவர், பாகாங், பெர்­லிஸ், கிளந்­தான், திரெங்­கானு, மலாக்கா, சாபா, சர­வாக் என தைப்­பூச விடு­முறை இல்­லாத மாநி­லங்­க­ளைப் பட்­டி­ய­லிட்­டுள்­ளார்.

“கெடா மாநில அர­சாங்­கம் இந்­துக்­க­ளின் மன­தைப் புண்­ப­டுத்­த­வில்லை. சிறப்பு பொது விடு­முறை என்­பது வரை­ய­றைக்கு உட்­பட்­டது. கெடா ஆட்­சி­மன்­றக் குழு­வின் முடி­வைப் பொறுத்து அந்த விடு­மு­றைக்கு அனு­மதி அளிக்­கப்­ப­டு­கிறது.

“சுகா­தார விதி­மு­றை­கள் நடப்­பில் இருந்­தா­லும் கோயில்­க­ளுக்­குச் செல்­ல மாநி­லத்­திலுள்ள 6.8 விழுக்­காட்டு இந்­துக்களுக்குத் தடை இல்லை,” என்று திரு அஃப்னான் கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!