‘மலேசியாவை முழுமையாக முடக்கும் யோசனை இல்லை’

கொரோனா கிரு­மிப் பர­வ­லின் வேகத்­தைத் தடுக்க முடி­யா­தி­ருப்­ப­தால், நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ர­வின்­போது (எம்­சிஓ) செயல்­பட அனு­ம­திக்­கப்­பட்ட முக்­கிய பொரு­ளி­யல் துறை­களை மூட மலேசியா ஆயத்­த­மாகி வரு­வதாகக் கூறப்­ப­டு­வதை ஐரோப்­பிய ஒன்றிய-மலே­சியா வர்த்­தக, தொழில் சபை நேற்று மறுத்­தது. அனைத்­து­லக வர்த்­தக, தொழில் அமைச்­சு­டன் நடத்­தப்­பட்ட அதி­காரபூர்­வ­மற்ற கலந்­து­ரை­யா­ட­லைத் தொடர்ந்து, அது தனது உறுப்­பி­னர்­க­ளுக்கு அனுப்­பிய அறிக்கை வெளியே கசிந்­துள்­ள­தாக அது குறிப்­பிட்­டது.

அதி­க­ரித்து வரும் கிரு­மித் தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் வர்த்­த­கங்­க­ளி­டம் விழிப்­பு­ணர்வை அதி­க­ரிப்­பது குறித்­தும் வர்த்­த­கங்­கள் முன்­வந்து பங்­காற்­றா­விட்­டால் அது எவ்­வாறு வர்த்­த­கங்­க­ளைப் பாதிக்­கும் என்­ப­து குறித்­துமே பேசப்­பட்­ட­தா­க­வும் அது சொன்னது.

அன்­றா­டத் தொற்று எண்­ணிக்கை குறை­யா­விட்­டால் பிப்­ர­வரி 4ஆம் தேதி எம்­சிஓ விதி­முறை காலா­வ­தி­யா­ன­தும், அத்­தி­யா­வ­சிய தேவை­கள் தவிர்த்த அனைத்து வர்த்­தக செயல்­பா­டு­க­ளை­யும் நிறுத்­தும் முழு முடக்­க­நி­லையை அறி­விக்க அந்­நாடு திட்­ட­மி­டு­வதை பல துறை­களும் அர­சாங்­கத் தக­வல்­களும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் முன்­ன­தா­கக் கூறின.

நேற்று முன்­தி­னம் அங்கு 4,275 பேருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. இது­வரை மொத்­தம் 667 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

பிற அமைச்­சு­கள் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட வர்த்­தக நட­வ­டிக்­கை­கள் அத்­தி­யா­வ­சிய சேவை­க­ளு­டன் தொடர்ந்து செயல்­ப­ட­லாம் என்றே கரு­து­கின்­றன.

அனைத்­து­லக வர்த்­தக, தொழில் அமைச்சு வெள்ளி அன்று நடத்­திய கலந்­து­ரை­யா­ட­லின்­போது, உற்­பத்­தித் துறையை எச்­ச­ரித்­துள்­ளது. மலே­சி­யா­வின் 300 கிரு­மித்­தொற்று குழு­மங்­களில் கிட்­டத்­தட்ட மூன்­றில் ஒரு பங்கு இந்­தத் தொழி­லு­டன் தொடர்­பு­டை­ய­தாக உள்­ளது.

மலே­சிய உற்­பத்­தி­யா­ளர்­கள் சம் மேள­ன­மும் ஐரோப்­பிய ஒன்­றிய- மலே­சியா வர்த்­தக, தொழில் சபை­யும் தங்­கள் உறுப்­பி­னர்­க­ளுக்கு அனுப்­பிய அறிக்­கை­களில், கடுமை­யான பாது­காப்பு நடை­மு­றை­களைப் பரிந்­து­ரைத்­துள்­ளது.

ஊழி­யர் தங்­கு­மி­டங்­களில் தனி­மைப்­ப­டுத்­தும் இடங்­களை அமைத்­த­தல், போக்­கு­வ­ரத்து வாக­னங்­களில் ஊழி­யர் எண்­ணிக்­கை­யைப் பாதி­யா­கக் குறைத்­தல், ஊழி­யர்­க­ளின் தங்­கு­மி­டப் பொறுப்­பு­கள் வெளி­நிறு­வ­னங்­க­ளி­டம் கொடுக்­கப்­பட்­டி­ருந்­தா­லும், அவர்­க­ளின் நட­வ­டிக்­கை­க­ளின் முழுப் பொறுப்­பை­யும் ஏற்­பது உள்­ளிட்­டவை இதில் அடங்கும்.

கொவிட்-19 குழு­மங்­க­ளின் தொடக்­க­மாக பணி­யி­டங்­கள் மாறி வரு­வதை சுகா­தார அமைச்சு வெளி­யி­டும் அன்­றாட நில­வ­ரம் காட்­டு­கின்­றன. கடந்த வியா­ழன் முதல் கண்­ட­றி­யப்­பட்ட 39 புதிய குழு­மங்­களில் மூன்­றில் இரண்டு பங்கு பணி­யி­டங்­க­ளி­லி­ருந்து வந்­தவை.

கடந்த ஆண்டு மலே­சி­யா­வும் தொற்­று­நோய் பர­வ­லால் பொரு­ளி­யல் மந்­தத்­தைச் சந்­தித்­தது. இவ்­வாண்டு பொரு­ளி­யல் மீட்­சிக்­கான நம்­பிக்­கையை நட­மாட்­டக் கட்­டுப்­பாடு குறைக்­க­லாம் என்­பதை நிதி­ய­மைச்­சர் ஜஃப்ருல் அஜீஸ் ஒப்­புக்­கொண்­டார். எனினும் 2021க்கான 6.5-7.5% வளர்ச்சி முன்­னு­ரைப்பை அர­சாங்­கம் மாற்­ற­வில்லை என்று அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!