பத்துமலை தைப்பூச ரத ஊர்வலத்திற்கு அனுமதி; பினாங்கு துணை முதல்வர் சாடல்

கோலாலம்பூர்: மலேசியாவில் தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்-பத்துமலை ரத ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியதில் தே சியப் பாதுகாப்பு மன்றம்
இரட்டை நிலை ப்பாடு கொண்டுள்ளதாக பினாங்கு துணை முதல்வர் ராமசாமி கூறியுள்ளார்.

“மலேசியாவின் மாநில, மாவட்ட, உள்ளூர் அரசாங்கங்களுடனான உறவில் தேசியப் பாதுகாப்பு மன்றம் ஒருவித முரண்பாட்டைக் கொண்டுள்ளதை கவனித்தேன்.

“பாதுகாப்பு மன்றத்தின் முதல் சுற்றறிக்கையில் தைப்பூச ரத ஊர்வலங்கள், தொடர்புடைய பிற நிகழ்வுகளை நாடு முழுவதும் தடை செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

“கடுமையான கட்டுப்பாடுகளுடன் பால்காவடிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

“ஆனால் திடீரென்று, தைப்பூசத்திற்குச் சில நாட்களே இருக்கும் நிலையில், பத்துமலை கோவில் ரத ஊர்வலத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டில் உள்ள மற்ற கோயில்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?

“கிருமிப் பரவலை மக்கள் தீவிர மாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால், பாதுகாப்பு மன்றமும் தீவிரமாகவும் பொறுப்புள்ளதாகவும் இருக்க வேண்டும். இந்த பொறுப்பற்ற நடவடிக்கை கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர உதவப் போவதில்லை,” என்றார் ராமசாமி.

இம்மாதம் 28ஆம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படவுள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு மன்றத்தின் அண்மைய உத்தரவுப்படி ஜனவரி 27ஆம் தேதி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து ரதம் புறப்பட்டு ஊர்வலமாக பத்துமலை சென்று, ஜனவரி 29ஆம் தேதி மீண்டும் மாரியம்மன் ஆலயத்திற்குத் திரும்பும். ஆனால், ரதம் புறப்பட்ட பின்னர் எங்கேயும் நிற்பதற்கு அனுமதி கிடையாது, ரதத்துடன் 10 பக்தர்களுக்கும் மேல் செல்லக்கூடாது, வழியெங்கும் இசை முழக்கங்களுக்கு அனுமதி இல்லை என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மன்றத்தின் இந்த அனுமதி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த மத்திய அமைச்சர் அனுவார் மூசா, கோலாலம்பூர் அதிகாரிகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வர் என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!