‘விதிவிலக்கு வேண்டுமென்றால் தனி விமான பயணம் அவசியம்’

அமைச்­சர்­க­ளுக்­குப் பத்து நாள் கட்­டாய தனி­மைப்­ப­டுத்­தல் விதி­மு­றை­யில் இருந்து விலக்கு அளிக்­கப்­பட்­ட­தற்கு எதி­ராக கடும் விமர்­ச­னங்­கள் எழுந்த நிலை­யில், அதி­கா­ர­பூர்வ வெளி­நாட்­டுப் பய­ணங்­க­ளின்­போது அமைச்­சர்­கள் பின்­பற்­ற வேண்­டிய நடை­மு­றை­களை (எஸ்ஓபி) மலே­சிய அர­சாங்­கம் வெளி­யிட்­டு உள்­ளது.

இது­பற்றி பேசிய சுகா­தா­ரத் துறை தலைமை இயக்­கு­நர் டாக்­டர் நூர் ஹிஸாம் அப்­துல்லா, “தனி­யார் விமா­னங்­க­ளைப் பயன்­ப­டுத்தி, வெளி­நாட்டுப் பய­ணத்­தின்­போது பொது வெளி­யில் செல்­லாத அமைச்­சர்­கள் மட்­டுமே, புதிய விதி­க­ளின்­படி மூன்று நாட்­கள் கண்­கா­ணிப்­புக்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள்,” என்­றார்.

வர்த்­தக விமா­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­தும் அமைச்­சர்­கள், எல்­லோ­ரை­யும் போலவே பத்து நாள் தனி­மைப்­ப­டுத்­த­லுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள் என்­றும் அவர் சொன்­னார்.

சுகா­தார அமைச்சு தனது அதி­கா­ர­பூர்வ ஃபேஸ்புக் பக்­கத்­தில் இந்­ந­டை­மு­றை­களைப் பகிர்ந்­து­கொண்­டுள்­ளது.

அதி­கா­ர­பூர்வ வெளி­நாட்டு பய­ண­மாக இருக்க வேண்­டும், குறு­கிய கால பய­ணம், சிறிய பேரா­ளர் குழு போன்ற நடை­மு­றை­களை அமைச்­சர்­கள் தங்­க­ளின் பய­ணங்­க­ளின் போது பின்­பற்­ற வேண்­டும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

அதோடு அமைச்­சர்­கள் வர்த்­தக ரீதி­யி­லான விமா­னங்­க­ளைத் தவிர்த்து வெளி­நாட்டுப் பய­ணங்­க­ளின் போது தனி­யார் விமா­னங்­க­ளைப் பயன்­ப­டுத்த வேண்­டும் என்­றும் அதில் தெரி­விக்­கப்­பட்­டு உள்­ளது.

மேலும் வெளி­நாட்­டிற்­குச் சென்ற பிறகு, அமைச்­சர்­கள் அதி­கா­ர­பூர்வ கார­ணங்­க­ளைத் தவிர வேறு எதற்­கா­க­வும் வெளியே செல்­லக்­கூ­டாது என்­றும் தெளி­வுப­டுத்­தப்­பட்­டு உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!