மலேசியாவில் ஒரே நாளில் 25 கொவிட்-19 மரணங்கள்

மலே­சி­யா­வில் நேற்று ஒரே நாளில் கொவிட்-19 கார­ண­மாக 25 பேர் மாண்­ட­னர். கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக மலே­சி­யா­வில் ஒரே நாளில் இத்­தனை பேர் உயி­ரி­ழந்­தி­ருப்­பது இதுவே முதல்­முறை.

இது­வரை மலே­சி­யா­வில் கொரானா கிரு­மித்­தொற்று கார­ண­மாக மொத்­தம் 1,030 பேர் மாண்டு­ விட்­ட­னர்.

மலே­சி­யா­வில் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 274,875ஆக அதி­க­ரித்­துள்­ளது.

கொரோ­னா­வி­லி­ருந்து 5,320 பேர் குண­ம­டைந்­து­விட்­ட­தாக மலே­சிய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

227 கொவிட்-19 நோயா­ளி­கள் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் இருப்­ப­தா­க­வும் அவர்­களில் 103 பேருக்­குச் செயற்கை சுவா­சக் கருவி பொருத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

இதற்­கி­டையே, மலே­சி­யா­வில் இருப்­ப­வர்­க­ளுக்கு அடுத்த வாரம் கொவிட்-19 தடுப்­பூசி போடும் திட்­டம் தொடங்­கு­கிறது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வரும் சட்­ட­வி­ரோத குடி­யே­றி­கள் கைது செய்­யப்­ப­ட­மாட்­டார்­கள் என்று மலே­சிய அர­சாங்­கம் உறுதி அளித்­துள்­ளது.

சட்­ட­வி­ரோத குடி­யே­றி­க­ளின் நம்­பிக்­கை­யைப் பெற அர­சாங்­கம் முயன்று வரு­வ­தா­க­வும் எளி­தில் பாதிப்­ப­டை­யக்­கூ­டி­ய­வர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள உதவ அனைத்­துலக அமைப்­பு­க­ளு­டன் மிக அணுக்­க­மா­கச் செயல்­பட்டு வரு­வ­தா­க­வும் தடுப்­பூ­சித் திட்­டத்­துக்­குத் தலைமை தாங்­கும் அமைச்­ச­ரான கைரி ஜமா­லு­தீன் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தார்.

மலே­சி­யா­வின் 33 மில்­லி­யன் மக்­கள்­தொ­கை­யில் 80 விழுக்­காட்­டி­ன­ருக்­குத் தேவை­யான தடுப்­பூசி மருந்தை வாங்­கி­விட்­ட­தாக மலே­சிய அர­சாங்­கம் தெரி­வித்­துள்­ளது.

மலே­சி­யர்­க­ளுக்கு மட்­டு­மல்­லாது, வெளி­நாட்டு ஊழி­யர்­கள், அக­தி­கள் உட்­பட நாட்­டில் உள்ள அனை­வ­ருக்­கும் கொவிட்-19 தடுப்­பூசி இல­வ­ச­மா­கப் போடப்­படும் என்று மலே­சியா கூறி­யுள்­ளது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வதை மலே­சியா இன்­னும் கட்­டா­ய­மாக்­க­வில்லை.

இதற்­கி­டையே, மலே­சி­யா­வில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நட­மாட்­டக் கட்­டுப்­பாடு உத்­த­ரவை மீறிய குற்­றத்­துக்­காக 463 பேரை அந்­நாட்டு போலி­சார் கைது செய்­துள்­ள­னர். பாது­காப்­பான இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிக்­கா­தது, அனு­மதி பெறா­மல் வேறு நாடு­க­ளுக்­குச் சென்­றது, முகக்­க­வ­சம் அணி­யா­தது, வாடிக்­கை­யா­ளர் விவ­ரங்­க­ளைப் பதிவு செய்­யா­தது போன்ற விதி­மீ­றல்­களில் ஈடு­பட்­ட­தற்­காக அவர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர். நட­மாட்­டக் கட்­டுப்­பாடு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்ட மாநி­லங்­களில் உள்ள உண­வ­கங்­களில் மேசை­யின் அள­வைப் பொறுத்து ஒரே மேசை­யில் இரண்­டுக்­கும் மேற்­பட்­டோர் அமர்­வது அனு­ம­திக்­கப்­படும் என்று மூத்த அமைச்­சர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் தெரி­வித்­தார். அதே போல காரின் கொள் ­அள­வைப் பொறுத்து இரண்­டுக்­கும் மேற்­பட்­டோர் ஒரே காரில் பய­ணம் செய்ய அனு­ம­திக்­கப்­படும் என்­றார் அவர். இந்­தப் புதிய விதி­முறை இன்­றி­லி­ருந்து நடப்­புக்கு வரு­கிறது.

சிலாங்­கூர், பினாங்கு, ஜோகூர் ஆகிய மாநி­லங்­க­ளு­டன் தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரி­லும் நட­மாட்­டக் கட்­டுப்­பாடு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!