மின்னிலக்க பொருளியலை ஊக்குவிக்க 56 பில்லியன் ரிங்கிட்

மின்­னி­லக்க பொரு­ளியலை ஊக்­கு­விக்­கும் நோக்­கில் மலே­சியா 56 பில்­லி­யன் ரிங்­கிட் (சுமார் S$18 பில்லியன்) மதிப்­பி­லான திட்­டத்தை அறி­வித்­துள்­ளது.

இந்தப் பத்­தாண்டு திட்­டத்­தின் கீழ் மலே­சிய அர­சாங்­கம் விரை­வான, பரந்த இணைய இணைப்­பிற்­கான உள்­கட்­ட­மைப்பை மேம்படுத்தும் என்று அந்­நாட்டு பிர­த­மர் முகை­தீன் யாசின் தெரி­வித்­தார்.

இந்தத் திட்­டத்­தின் கிட்­டத்­தட்ட பாதி­ய­ளவு தொகை தேசிய மின்­னி­லக்க இணைப்பு திட்­டத்­திற்குச் செல­வி­டப்­படும். கண்­ணா­டி­யிழை கம்­பி­வ­ட இணைய இணைப்பை ஒன்­பது மில்­லி­யன் இடங்­க­ளுக்கு விரி­வு­ப­டுத்­தும் ஐந்­தாண்டு திட்­ட­மா­கும் இது. முதற்­கட்­ட­மாக 2022ஆம் ஆண்­டில் இந்த வசதி 7.5 மில்­லி­யன் இடங்­க­ளுக்கு விரிவு­ப­டுத்­தப்­படும்.

மலே­சி­யா­வின் 5ஜி மேம்­பாட்­டிற்கு இந்த உள்­கட்­ட­மைப்பு முக்­கி­ய­மா­ன­தாக இருக்­கும். தேசிய மின்­னி­லக்க இணைப்புத் திட்­டத்­திற்­காக கட­லுக்­க­டி­யில் கம்­பி­வ­டங்­களை இணைப்­ப­தற்­காக 2023ஆம் ஆண்­டிற்­குள் தனி­யார் தொலைத் தொடர்பு நிறு­வ­னங்­கள் ஒரு பில்­லி­ய­னுக்­கும் கூடு­த­லான ரிங்­கிட்­டை­யும், 5ஜி இணைப்பை நாடு முழு­வ­தும் விரி­வு­ப­டுத்­து­வ­தற்கு மேலும் 15 பில்­லி­யன் ரிங்­கிட்­டை­யும் முத­லீடு செய்­ய­வுள்­ள­தா­க­வும் முகை­தீன் கூறி­னார்.

நாடு முழு­வ­தும் 5ஜி இணைப்­பைக் கொண்டு வர மலே­சியா 10 ஆண்டு இலக்கை நிர்­ண­யித்­தி­ருந்­தா­லும் இதன் பலனை இவ்­வாண்டு இறுதி முதல் படிப்­ப­டி­யாக அனு­ப­விக்க முடி­யும் என்று கூறப்­ப­டு­கிறது.

“5ஜி தொழில்­நுட்­பத்­தின் நன்­மை­களை இவ்­வாண்டு இறு­தி­ முதல் மக்­கள் அனு­ப­விக்கத் தொடங்­கு­வார்­கள்.

“இதன் மூலம், இணை­யம், கிள­வுட் சேவை­கள் மூலம் தக­வல்­களை உட­ன­டி­யாக பகிர்ந்­து­கொள்­ளும் வகை­யில் 5ஜி கட்­ட­மைப்பை ஏற்ப­டுத்­திய முதல் சில நாடு­களில் ஒன்­றாக மலே­சி­யா­வும் இருக்­கும்,” என்­றார் முகை­தீன்.

இதன் மூலம் 70 பில்­லி­யன் டாலர் வரை­யி­லான உள்­நாட்டு, வெளி­நாட்டு முத­லீ­டு­கள் ஈர்க்­கப்­படும் என்­றும் உற்­பத்­தித்­தி­றன் 30 விழுக்­காடு அதி­க­ரிக்­கும் என்­றும் அவர் சொன்­னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!