முகைதீன்: இருமுறை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மலேசியாவெங்கும் பயணம் செய்யக்கூடும்

கொவிட்-19 தடுப்பூசியை இரண்டாவது முறை போட்டுக்கொள்ளும் மலேசியர்கள் மலேசியாவெங்கும் பயணம் செய்ய அனுமதிக்கப்படக்கூடும் என்று அந்நாட்டுப் பிரதமர் முகைதீன் யாசின் நேற்று தெரிவித்தார்.
“தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கிருமித்தொற்றிடமிருந்து பாதுகாக்கப்படலாம் என்றபோதிலும் அவர்கள் உடலுக்குள் கொவிட்-19 கிருமி ஏற்கெனவே இருக்கக்கூடும் என்று முதலில் நம்பப்பட்டது. ஆனால் இது உண்மையல்ல என்று தெரியவந்துள்ளது.
“தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் இதுகுறித்து நான் கலந்துரையாடினேன்.இருமுறை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மலேசியாவெங்கும் பயணம் செய்வதை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க இருக்கிறோம்,” என்று சரவாக் தலைநகர்  கூச்சிங்கில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் திரு முகைதீன் தெரிவித்தார்.
மலேசியாவில் மாநிலங்களுக்கிடையிலான பயணம் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. வேலை தொடர்பான பயணங்கள் இதற்கு விதிவிலக்கு.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!