மலேசியா: வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்ல அனுமதி

மலேசியாவில் முழுமையாகத் தடுப்பூசி போட்டோர் இனி மாநிலங்களுக்கு இடையிலும் வெளிநாடுகளுக்கும் செல்ல அனுமதிக்கப்படுவர். அந்நாட்டில் உள்ள பெரியவர்களில் இதுவரை 90 விழுக்காட்டினருக்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமையன்று தடுப்பூசி நடவடிக்கைக்கான இலக்கு வெற்றி அடைந்ததைக் குறிக்கும் விதமாக உரையை ஆற்றிய அந்நாட்டுப் பிரதமர் சப்ரி யாக்கோப், கிருமித்தொற்று அதிகரித்தாலும் கட்டுப்பாடுகள் மீண்டும் தொடரும்எனத் தெரிவித்தார்.

“இயல்பான வாழ்க்கை மீண்டும் தொடரும் என்பதை நான் உறுதி அளிக்கிறேன். சம்பவங்கள் மீண்டும் உயர்ந்தாலும் ஒருசில இடங்களில்தான் நாங்கள் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவோம். விதிமுறைகளின்படி நாம் நடந்துகொண்டால் மூடல்களைத் தவிர்க்கலாம்,” என்று அவர் தெரிவித்தார்.

தடுப்பூசிகளை முழுமையாகப் போட்டுக்கொண்ட மலேசியர்களும் அவர்களது பிள்ளைகளும் உள்நாட்டிலேயே பிற மாநிலங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்.

வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புவோருக்கும் அனுமதி உள்ளது. ஆனால் மலேசியாவுக்குள் நுழைய முற்படுவோருக்கு 14 நாள் கட்டாய தனிமை உத்தரவு நடப்பில் இன்னும் நடப்பில் உள்ளது.

முன்னதாக, பணி அல்லது படிப்பு போன்ற அத்தியாவசிய காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் ‘மைட்ராவில்பாஸ்’ திட்டம் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.

அவரசம், வர்த்தகம் மற்றும் அதிகாரபூர்வ காரணங்களைத் தவிர மலேசிய எல்லைப்பகுதிகள் மீண்டும் திறக்கப்படவில்லை என்று திரு இஸ்மைல் தெரிவித்தார்.

எந்த நாட்டினர் மலேசியாவுக்குள் வரலாம் என்பது அந்தந்த நாடுகளின் கிருமித்தொற்று நிலவரத்தைப் பொறுத்திருப்பதாக அவர் கடந்த வியாழக்கிழமை கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!