முன்னாள் தலைமை சட்ட அதிகாரி மீது நஜிப் வழக்கு

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் தலைமைச் சட்ட அதிகாரியான டோமி தாமஸ் மீது அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் (படம்) மான நஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார்.
திரு டோமி தாமஸ் ‘ஜஸ்டிஸ் இன் த வைல்டர்னஸ்’ (திக்குத் தெரியாத காட்டில் நீதித் துறை) என்ற தமது சுயசரிதைப் புத்தகத்தில் மலேசியாவில் பரபரப்பாகப் பேசப்பட்ட மங்கோலிய அழகி அல்டன்டுயா கொலை செய்யப்பட்டது பற்றி திரு நஜிப்பின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அந்தப் புத்தகத்தில் எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது.

அல்டன்டுயா ஷாரிபூ என்ற 28 வயது மங்கோலிய மாது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு பின்னர் அவரது உடல் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதைச் செய்ததாகக் கூறி போலிஸ் அதிரடிப் படையைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.அந்த இரு போலிஸ் அதிரடிப் படை வீரர்களும் அப்பொழுது திரு நஜிப்பின் பாதுகாப்புப் படைப் பிரிவை சேர்ந்தவர்கள்.

எனினும், அந்தக் கொலைக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று திரு நஜிப் கூறி வந்துள்ளார். இந்த வழக்கில் அந்தப் புத்தகத்தின் பதிப்பாளர்களான ‘ஜிபி கெராக்புடாயா’ என்ற நிறுவனத்தின் மீதும் முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் வழக்குத் தொடுத்துள்ளார்.
திரு தாமஸின் பதவிக்காலத்தில் அவர் மலாய்க்காரர்களுக்கு எதிரானவர் என்ற சர்ச்சை கிளம்பியது.
அவருடைய சுயசரிதையில் அவர் மலாய் இனத்தவருக்கு எதிராக பல அவமானகரமான கருத்துகளை அள்ளி வீசியதாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

மலாய் இனத்தவரிடையே பெருமளவில் சர்ச்சையை எற்படுத்தியது. அந்தப் புத்தகம்.
மலேசியாவின் பக்கத்தான் ஹரப்பான் அரசு, ஆட்சியமைத்த 22 மாதங்களே ஆன நிலையில், கவிழ்ந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

திரு தாமஸின் சுயசரிதைப் புத்தகத்தில் அல்டன்டுயா கொலை பற்றி ஓர் அத்தியாயம் உள்ளது. அதிலுள்ள பல பத்திகள் தமது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது என திரு நஜிப் வழக்கில் கூறியுள்ளார்.
இதன் தொடர்பில் இழப்பீடு கேட்டு தாம் விடுத்த கோரிக்கை கடிதத்துக்கு திரு தாமஸ் சரிவர பதில் தரவில்லை என்று திரு நஜிப் முறையிட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!