மலேசியா விரைவில் எல்லா குடிநுழைவு சாவடிகளைத் திறந்துவிடும்

மலேசியா தனது எல்லைகளை மீண்டும் திறக்கவிருப்பதால், நாட்டின் குடிநுழைவுச் சாவடிகளும் திறக்கப்படவிருப்பதாக அந்நாட்டு சுற்றுலா, கலாசாரத் துறைகளுக்கான அமைச்சர் நான்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.

ஜோகூர் மேம்பாலம், கேலாங் பத்தாவில் உள்ள இரண்டாம் இணைப்பு ஆகிய சிங்கப்பூர்-மலேசியாவுக்கு இடையிலான தரைவழிப் பாதைகள் அவற்றில் அடங்கும்.

இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் விரைவில் செய்யவிருக்கிறார் என்றார் அமைச்சர்.

சுற்றுலாத் துறையின் முக்கிய நபர்களை திங்கள் அன்று சந்தித்த பிறகு "நில எல்லையான காஸ்வே உட்பட, மலேசியாவின் அனைத்து எல்லைகளும் திறக்கப்படவுள்ளன" என்றார் நான்சி சுக்ரி.

எல்லைகளை மீண்டும் திறப்பதற்குத் தயாராகும் வகையில், சோதனைச் சாவடிகளில் உள்ள அனைத்து தானியக்க நுழைவாயில்களும் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் கைருல் டிசைமி டவுட் தெரிவித்தார்.

தானியக்க நுழைவாயில்கள் சனிக்கிழமையன்று செயல்படுத்தப்பட்டன.

மலேசியாவின் எல்லைகள் திறக்கவிருப்பதால், நீண்ட காலமாக பிரிந்திருக்கும் உறவுகள் இந்த ஆண்டு நோன்புப் பெருநாளை ஒன்றாக கொண்டாடுவர் என்று மலேசிய பிரதமர் அண்மையில் கூறியிருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!