'பொதுமக்களின் விருப்பத்துக்கேற்ப கோழி விலை உச்சவரம்பு தொடரப்படுகிறது'

பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கு ஏற்றவாறே கோழி விலை உச்சவரம்பு தொடர்ந்து செயல்படுத்தப்படுவதாக மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளார்.

மலேசியர்களின் விருப்பத்திற்கு அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

கோழி விலை உச்சவரம்பு ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து விலக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்குப் பிறகு விலை உச்சவரம்பைத் தொடர்ந்து செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டதையொட்டி மலேசிய அரசாங்கம் சீரான முறையில் சட்டதிட்டங்களை வரைவதில்லை என்று எதிர்க் கட்சியினர் குறை கூறினர். 

அரசாங்கம் அதற்குப் பதிலளிக்குமாறு அவர்கள் குரல் எழுப்பினர்.

அதற்கு புத்ரஜெயா நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது திரு இஸ்மாயில் செய்தியாளர்களிடம் பதிலளித்தார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!