சாலை மறியல் சம்பவம்: சிங்கப்பூர்ப் பெண்ணை மலேசிய காவல் துறை தேடுகிறது

ஒரு வாகனத்தின் உரிமத் தகடை அகற்றி, அதை வாகனத்தின் சன்னல் மீது விட்டெறிந்தவரை மலேசிய காவல் துறையினர் தேடிவருகின்றனர். இந்தச் செயலைப் புரிந்தவர் சிங்கப்பூர்ப் பெண் என நம்பப்படுகிறது.

ஜோகூர் சோதனைச் சவாடியில் சம்பவம் நேற்று நடந்தது.

சந்தேக நபர் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட வாகனத்தில் இருந்ததாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட நபர் சிங்கப்பூருக்குள் வந்துகொண்டிருந்தபோது, சாலை தடத்தை மாற்றும்போது சந்தேக நபரின் வாகனத்தில் கீறு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அந்த வாகனத்தில் இருந்த ஆண் ஓட்டுநரும் மாதுவும் வாகனத்திலிருந்த வெளியேறி பாதிக்கப்பட்டவரைப் பார்த்து ஆபாச சைகைகள் செய்ததாகவும், கூச்சல் போட்டதாகவும் கூறப்பட்டது. சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரின் வாகன உரிமத் தகடை அகற்றி அதை வாகன சன்னலில் வீசியதாகத் தெரிகிறது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருக்கு காயமடையவில்லை என மலேசிய காவல் துறையினர் தெரிவித்தனர். அவர் ஓட்டியது மலேசிய வாகனமா சிங்கப்பூர் வாகனமா என்று தெரிவிக்கப்படவில்லை.

இந்தச் சம்பவம் பதிவுசெய்யப்பட்ட காணொளி 500க்கு மேற்பட்ட தடவை பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!