மலேசிய கடைத்தொகுதியிலிருந்து சிங்கப்பூர் வாகனம் திருட்டு

மலேசியாவின் கெந்திங் மலைக்குச் சுற்றுலா சென்ற சிங்கப்பூரரின் வாகனம் திருடுபோனது. அது ஹோண்டா சிவிக் ‘ஆர்’ ரக வாகனம்.
கெந்திங் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் ஹோட்டலில் உள்ள ஒரு கடைத்தொகுதியில் தன்னுடைய வாகனத்தை நிறுத்திவைத்திருந்ததாக வாகன உரிமையாளர் டேமியன் கூறினார்.

ஜூலை 15 அன்று அவர் கெந்திங்கை அடைந்ததும் வாகனத்தை அங்கு நிறுத்தியுள்ளார். அடுத்த நாள் வெளியே செல்வதற்காக வாகனத்தை எடுக்க வந்தவருக்கு பெரும் அதிர்ச்சி. கார் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இடத்தில் வாகனம் இல்லை. அந்த இடத்தை இரண்டு மணிநேரம் அலசியும், வாகனம் கிடைக்கவில்லை.

ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் கொடுத்தார். ஆனால் அதை நிர்வாகம் அலட்சியமாக எடுத்துக்கொண்டதாக டேமியன் கூறினார்.
வேறு வழியின்றி மலேசியக் காவல் துறையிடம் புகார் கொடுத்தார். ஹோட்டல் கண்காணிப்புக் கேமிராவில் பதிவுசெய்யப்பட்ட காணொளியை சோதனையிட்ட காவல் துறையினர், வாகனம் திருடப்பட்டதை உறுதிசெய்தனர். ஜூலை 16 அன்று நள்ளிரவு தாண்டி டேமியனின் வாகனம் கடைத்தொகுதியிலிருந்து வெளியேறும் காட்சி தென்பட்டது.

வாகனம் முறையாக பூட்டப்பட்டிருந்தும், வாகனத்துக்குள் திருடன் எவ்வாறு புகுந்தான் என்பது புரியவில்லை என டேமியன் குறிப்பிட்டார்.
டேமியனின் ஹோண்டா சிவிக் ‘ஆர்’ ரக வாகனத்தின் மதிப்பு கிட்டத்தட்ட $220,000.

மலேசியாவுக்கு வாகனத்தை ஓட்டிச்செல்லும் அனைத்து சிங்கப்பூரர்களும் கவனமாக இருக்குமாறு டேமியன் கேட்டுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!