மலேசியா-இந்தியா விமானப் படைகள் இணைந்து கூட்டுப் பயிற்சி

மலேசியாவின் ராயல் மலேசிய விமானப்படையும் இந்திய விமானப்படையும் பங்கேற்கும் முதல் இருதரப்பு கூட்டுப் பயிற்சி மலேசியாவில் நடைபெறுகிறது.

உதாரா சக்தி என்ற தலைப்பில் நடைபெறும் இந்த பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய விமானப் படையின் ஒருபிரிவு, விமானப்படை விமான தளத்தில் இருந்து மலேசியாவின் குந்தன் விமானத் தளத்திற்கு புறப்பட்டுச் சென்றது. இந்திய விமானப்படையின் எஸ்யூ 30-எம்கேஐ, சி-17 ரக விமானங்கள் இந்த வான் பயிற்சியில் ஈடுபடுகின்றன. ராயல் மலேசியன் விமானப்படை எஸ்யூ 30-எம்கேஎம் விமானம் வான் பயிற்சியில் பங்கேற்கிறது.

இந்தப் பயிற்சி, இந்திய விமானப்படையை சேர்ந்தவர்களுக்கு, ராயல் மலேசிய விமானப்படையின் சிறந்த நடைமுறைகளை அதன் சிறந்த நிபுணர்களுடன் பகிர்ந்து கொள்ளுவது மற்றும் பரஸ்பர போர் திறன்கள் குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்பையும் வழங்கும்.

நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில், இரு நாட்டு விமானப்படைகளுக்குமிடையே, பல்வேறு வான்வழிப் போர் பயிற்சிகள் இடம் பெறுகின்றன. உதாரா சக்தி பயிற்சி இருநாடுகளிடையேயான நீண்டகால நட்புறவை மேலும் அதிகரிப்பதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வழிகளை மேம்படுத்தி, இருநாட்டு பாதுகாப்பை அதிகரிக்கும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!