'சிங்கப்பூருக்கு மலேசியா கோழியை அனுப்ப முடியுமா? முடியாதா?' குழப்பத்தில் மலேசிய பண்ணை உரிமையாளர்கள்

சிங்கப்பூருக்கு கோழி இறக்குமதி செய்ய மலேசியாவில் விதிக்கப்பட்ட தடை அடுத்த மாதம் அகற்றப்படுவதை மலேசிய கோழிப் பண்ணை உரிமையாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஆனால் கோழி இறக்குமதி செய்ய எப்போது அனுமதி கிடைக்கும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

இம்மாதம் தொடக்கத்திலிருந்து கோழிப் பண்ணை உரிமையாளர்கள் இறக்குமதி உரிமத்துக்கு விண்ணிக்கத் தொடங்கி விட்டனர்.

விண்ணப்பம் செய்ய ஒரு நாள்கூட எடுப்பதில்லை. ஆனால் பல நாள் ஆகியும் அனுமதி கிடைக்கவில்லை என்று கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

சில குறிப்பிட்ட கோழிப் பண்ணைகள், வேளாண், உணவுத் தொழில்துறை அமைச்சிடமிருந்து அனுமதிபெற்ற வின்னர் மீண்டும் கோழி ஏற்றுமதியைத் தொடங்கலாம் என்று மலேசியா ஆகஸ்ட் 29ஆம் தேதி அறிவித்தது.

வேளாண், உணவுத் தொழில்துறை அமைச்சின் விலங்குநலச் சேவைத் துறை விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்குகிறது.

ஆனால் அங்குள்ள அதிகாரிகள், அமைச்சும் அமைச்சரும் அனுமதி தர காத்திருப்பதாகத் தங்களிடம் கூறியதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் குறிப்பிட்டனர்.

உரிமங்கள் உரிய நேரத்தில் கிடைக்காததால் சிலாங்கூர் கோழிப் பண்ணைகள் தங்கள் கோழிகளை மிகக் குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!