மலேசியாவில் தேசிய முன்னணிக்கான ஆதரவு சரிவு

கோலாலம்பூர்: மலேசியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டு அந்நாட்டின் மத்திய அரசாங்கத்திற்கு இருக்கும் ஆதரவு சரிந்துள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு முன்பு 'பாரிசான் நேஷனல்' எனப்படும் தேசிய முன்னணியின் தலைமையில் இயங்கிய மலேசிய மத்திய அரசாங்கத்திற்கான ஆதரவு 31 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது.

இவ்வாண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதிக்கும் 28ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் 1,209 வாக்காளர்களைக் கொண்டு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்த விவரம் தெரியவந்தது.

சுயேச்சையாக இயங்கும் 'மெர்டேக்கா சென்டர் ஃபார் ஒப்பினியன் ரிசர்ச்' எனும் அமைப்பு கருத்துக் கணிப்பை நடத்தியது.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற முந்தைய பொதுத் தேர்தலில் இருந்ததையும்விட தேசிய முன்னணிக்கான ஆதரவு குறைந்துள்ளது.

அப்போது அதற்கு 39 விழுக்காடு ஆதரவு இருந்தது.

அப்படியிருந்தும் மலேசியா வரலாற்றில் முதன்முறையாக பொதுத் தேர்தலில் வெல்லத் தவறியது தேசிய முன்னணி.

இம்முறை 48 விழுக்காடு மலாய் இனத்தவர் தேசிய முன்னணி மீது அதிருப்தி கொண்டிருப்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

மலாய் இனத்தவர் அல்லாதோரிடையே விகிதம் 83 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது.

15வது மலேசியப் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் சனிக்கிழமையன்று (5 நவம்பர்) நடைபெறவுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!