உச்ச பதவிக்கு உயர்ந்த அன்வார் இப்ராகிம்: மலேசியாவுக்குப் புதிய தொடக்கம்

மலேசிய அரசியலில் அன்­வார் இப்­ராகிம் என்ற பெயரைக் கேட்­டாலே அவர் சந்தித்த இமாலய சவால்­கள், சோத­னை­கள் பற்­றி­தான் நினை­வுக்கு வரும்.

இருந்தாலும், முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும் என்­ப­தற்­கேற்ப சவால்­களையும் சோதனைகளையும் மனந்­தளரா­மல் முறி­யடித்த அன்­வார், கிட்­டத்­தட்ட 24 ஆண்டு கால இடைவிடா போராட்டத்திற்குப் பிறகு கடந்த வியா­ழனன்று மலே­சி­யாவின் பத்­தாவது பிர­த­ம­ரா­கப் பதவி ஏற்­றார்.

அண்­மை­யில் நடந்து முடிந்த 15வது மலே­சி­யப் பொதுத் தேர்­தலில் மக்­கள் புது­மை­யான பல முடி­வு­க­ளைச் செய்து இருக்­கி­றார்­கள்.

எந்த ஒரு கட்­சிக்­கும் கூட்­ட­ணிக்­கும் பெரும்­பான்மை கிடைக்­க­வில்லை. மலேசிய வர­லாற்­றில் முதன்­மு­த­லாக தொங்கு நாடா­ளு­மன்­றம் ஏற்­பட்­டது.

அன்வாரின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆகஅதிகமாக 82 தொகுதி களைக் கைப்பற்றியது. அதில் அன்வாரின் சொந்த கட்­சி­யான பிகேஆர் கட்சி 31 இடங்­களைப் பெற்­றது.

அன்­வார் அணியில், சீனர்­க­ளைப் பெரும்­பான்மை­யாகக் கொண்ட ஜன­நாயக செயல் கட்சி 40 இடங்­களை வென்­றது.

தீவிர இஸ்­லா­மி­யக் கொள்­கை­க­ளைக் கொண்ட பாஸ் கட்சி மற்ற எல்­லாக் கட்­சி­க­ளை­யும்­விட ஆக அதி­க­மாக 49 தொகு­தி­களில் வென்­றது. இந்­தக் கட்சி இரண்டாவதாக ஆக அதிக இடங்­களைப் பெற்ற பெரிக்­காத்­தான் நேஷ­னலில் அங்­கம் வகிக்­கிறது.

இவ்­வ­ள­வு­ கா­ல­மாக மலாய் மேலாதிக்­கம், உரி­மை­கள் ஆகி­ய­வற்­றைத் தூக்­கிப் பிடித்த அம்னோ ஓரங்­கட்­டப்­பட்­டுள்­ளது.

இத்தகைய ஒரு நிலையில், பெரும்­பான்மை இல்லா­மல் நாட்­டின் பத்­தா­வது பிர­த­மராக பதவி ஏற்று இருக்­கும் அன்வார், பத்­தில் தானே முத்து என்­பதை மெய்ப்­பிக்க முயல்­வார் என்­றும் அதில் அவர் வெற்றி பெறுவார் என்­றும் அவரின் ஆத­ர­வா­ளர்­கள் நம்­புகி­றார்­கள்.

மிகுந்த எச்­ச­ரிக்­கை­யு­ட­னும் கவ­ன­மா­க­வும் ஒவ்­வொரு நட­வ­டிக்­கை­யை­யும் மேற்­கொள்ள வேண்­டிய நிலை­யில் அன்வார் இருக்­கி­றார். நாட்டில் உள்ள அனைத்து இனத்­த­வர்­க­ளுக்­கும் சம உரிமை, வாய்ப்­பு­கள் கிடைப்­பதை அவர் உறுதி செய்­தாக வேண்டும்.

மாமன்­ன­ரின் கட்­ட­ளைக்கு ஏற்ப ஊழல் இல்லாத, இனம், சம­யம், மாநிலம், குடும்­பப் பின்னணி அடிப்­ப­டை­யில் எவ்வித பாகு­பா­டும் இல்லாத, அனைவரை­யும் உள்­ள­டக்­கிய சமு­தா­யத்தை உரு­வாக்­கும் இமாலய சவாலை அன்வார் எதிர்­நோக்கு­கி­றார்.

அத்­து­டன், விலை­வா­சி­யைக் குறைப்­பது, பொரு­ளி­யலை உயிர்ப்­பித்து மேம்­படுத்­து­வது, வேலை வாய்ப்­பு­களை அதி­கரிப்­பது, கல்­வித் தரத்தை உயர்த்­து­வது போன்ற முக்­கி­யப் பணி­களில் அன்­வார் உட­ன­டி­யா­கத் தீவி­ரம் காட்டி வெற்றி காண்­பார் என அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

நினைத்­துப் பார்க்­கவே பிரம்­மாண்­ட­மாக இருக்­கும் எதிர்­பார்ப்­பு­கள், கொஞ்சம் அயர்ந்­தாலே போதும் அன்­வா­ரின் அரசியல் தலை­மைத்­து­வம் ஆட்­டம் கண்டுவிடும் என்ற நிலை­யில் அர­சி­யல் சூழல்­ ஆகியவற்றுக்கு மத்­தி­யில் அன்வாரின் தலை­மைப் பய­ணத்­தில் ஒவ்வொரு நிமி­ட­மும் சவால்­க­ளுக்­குப் பஞ்­ச­மி­ருக்­காது.

என்­றா­லும்­கூட அர­சி­யல் வாழ்க்கை கற்­றுக்­கொ­டுத்த விலை­ம­திப்­பற்ற பாடங்­கள், தனது கசப்­பான அனு­ப­வங்­கள், மனப் பக்­கு­வம் எல்­லாம் அன்­வா­ருக்கு இம்­முறை கைகொ­டுத்து வழி­காட்­டும் என்று நம்ப இடம் உண்டு.

மலே­சி­யத் துணைப் பிர­த­ம­ரா­க­வும் நிதி அமைச்­ச­ரா­க­வும் 1993ஆம் ஆண்­டி­லி­ருந்து 1998ஆம் ஆண்டு வரை பதவி வகித்­த­வர் அன்­வார்.

ஊழல், முறை­யற்ற பாலி­யல் நட­வடிக்கை ஆகிய குற்­றங்­களைப் புரிந்ததாக கார­ணம் காட்டி அவர் பதவி நீக்­கம் செய்­யப்­பட்­டார்.

அர­சி­யல் காழ்ப்­பு­ணர்ச்சி கார­ண­மாக அன்­வார் மீது பொய்க் குற்­றச்­சாட்டு­கள் சுமத்­தப்­பட்­ட­தாக அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் பொங்கி எழுந்­தும் 1999ஆம் ஆண்­டில் அவ­ருக்­குச் சிறைத்தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அப்­போ­தெல்­லாம் அன்­வாருக்­குத் தூணாக இருந்து அவர் சார்­பாக அர­சி­யல் பய­ணத்­தைத் தொடர்ந்­த­வர் அவ­ரது மனைவி டாக்­டர் வான் அஸிசா வான் இஸ்­மா­யில்.

அன்­வார் மீதான முறை­யற்ற பாலியல் குற்­றம் தொடர்­பான குற்­றச்­சாட்டை நீதிமன்­றம் தள்­ளு­படி செய்­ததை அடுத்து, அவர் 2004ஆம் ஆண்­டு விடு­தலை யானார். ஆனால் 2014ஆம் ஆண்­டில் சிலாங்­கூ­ரின் முதல்­வ­ரா­கும் நோக்­கில் காஜாங் சட்­ட­மன்ற இடைத்­தேர்­த­லில் அன்­வார் போட்­டி­யிட இருந்­த­போது அதே குற்­றத்­தைக் கார­ணம் காட்டி அவர் மீண்டும் சிறை­யில் அடைக்­கப்­பட்­டார்.

மகா­தீர் முகம்­மது தான் பிரதமராக பதவி வகித்தபோது அன்­வாரை 1998ல் துணைப் பிர­த­மர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­னார். பிறகு பக்­கத்­தான் ஹரப்­பான் 2018ஆம் ஆண்­டில் முதல்­மு­றை­யாக ஆட்­சி­யைப் பிடித்­த­போது மீண்டும் பிர­த­மர் பொறுப்பை ஏற்ற மகா­தீர் முகம்­மது, கிட்டத்­தட்ட இரு ஆண்டு­களுக்­குப் பின் பொறுப்பை அன்­வா­ரி­டம் தரு­வ­தாக உறுதி அளித்­­தார். அன்­வா­ருக்கு மாமன்­ன­ரி­ட­மி­ருந்து பொது மன்­னிப்பு கிடைக்கவும் அவர் கார­ண­மாக இருந்­தார்.

ஆனால் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கட்சி தாவி­விட்­ட­னர் என்று கார­ணம் காட்டி பதவி வில­கி­னார் டாக்­டர் மகா­தீர். இத­னால் ஆட்சி கவிழ்ந்­தது. பிர­த­ம­ரா­கும் வாய்ப்பை இழந்­தார் அன்­வார்.

இது அன்­வா­ருக்கு மீண்­டும் இழைக்­கப்­பட்ட துரோ­கம் என்று அதி­ருப்­திக் குரல்­கள் எழுந்­தன.

அன்­வார் இப்போது பிர­த­மர் பதவி வகிப்­ப­தற்கு மலே­சிய மாமன்­னர் அப் துல்லா அக­மது ஷா சரி­யான நேரத்தில் எடுத்த உறு­தி­யான முடிவே கார­ணம்.

அர­சி­யல் இழு­ப­றிக்கு மாமன்­னர் முற்­றுப்­புள்ளி வைத்­தார். அன்­வா­ரை­யும் பிர­த­மர் பத­விக்­காக அடி­போட்ட பெரிக்­காத்­தான் நேஷ­னல் தலை­வர் முகை­தீன் யாசி­னை­யும் அழைத்து ஐக்­கிய அரசு­அமைக்க மாமன்­னர் அழைத்தார்.

அன்­வார் இதற்கு இணக்­கம் தெரி­விக்க, முகை­தீன் மறுத்­து­விட்­டார். மாமன்னர் சொன்ன சொல்லை மதித்து பெரும்­பா­லான கட்­சி­கள் அன்­வா­ருக்கு ஆத­ரவு தெரி­வித்­த­தும் நீண்­ட­கா­ல­மாக எட்­டாக் கனி­யாக இருந்த பிர­த­மர் பதவி அன்­வா­ருக்­குக் கிடைத்­து­விட்­டது.

அன்­வார் உச்­சத்தை எட்­டி­யுள்ள இந்த நேரத்­தில், லங்­கா­வி­யில் போட்­டி­யிட்டு படு­தோல்வி அடைந்­த டாக்­டர் மகா­தீர் அர­சி­ய­லில் அதல பாதா­ளத்­துக்­குச் சென்றுவிட்­டார்.

அன்வாரின் முதல் சவால் தனக்குப் பெரும்பான்மை ஆதரவு உண்டு என்பதை அவர் மெய்ப்பிக்க வேண்டும். இதற்காக அவர் நாடாளுமன்றத்தை டிசம்பர் 19ஆம் தேதி கூட்டுகிறார். அன்வாருக்குப் பெரும் பான்மை ஆதரவு இருக்கும், அவரின் அரசியல் தலைமைத்துவம் தொடரும் என்று நம்புவோம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!