$5,000 ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ கல்வி விருதுகள்

ஆரம்பகால பாலர்பருவக் கல்வி யைப் போதிக்கும் ஆசிரியர்கள் அத்துறைக்கென வடிவமைக்கப் பட்டிருக்கும் 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' கல்வி விருது மூலம் தங்களை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது மூலம் அந்த ஆசிரியர்கள் தங்களுக்குள்ள ஆற்றல்களை மேலும் வளப்படுத்திக்கொள்ளவும் அதன் மூலம் தலைமைத்துவப் பொறுப்புகளுக் கான திறன்களை வளர்த்துக் கொள்ளவும் முடியும். ஆரம்பகால பாலர்பருவத் தலை மைத்துவ மேல்நிலை டிப்ளோமா படிப்புக்கு தங்கள் முதலாளிகளால் பரிந்துரைக்கப்பட்ட கல்வியாளர் கள் 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' கல்வி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு வாரியம் தெரிவித்தது. வெற்றிகரமான விண்ணப்பதா ரர்களுக்கு $5,000 வழங்கப்படும். அவர்கள் இத்தொகையைக் கொண்டு தங்கள் ஆரம்பகால பாலர்பருவத் தலைமைத்துவ மேல் நிலை டிப்ளோமா படிப்புக்கான செலவுகளை ஈடுகட்ட முடியும் என்றும் வாரியம் சொல்லிற்று. 'லிட்டில் ஃபூட்பிரிண்ட்ஸ் ஸ்கூல்ஹவுஸ்' பாலர் பள்ளிக்கு நேற்றுக் காலை வருகையளித்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின் (நடுவில் அமர்ந்திருப்பவர்) முதலாம் ஆண்டு பாலர் பள்ளி மாணவரான ஐந்து வயது இத்தன் இங்குடன் உரையாடுகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு வாரியம் இந்தப் பாலர் பள்ளிக்கு 'பங்காளி நடத்துநர்' அந்தஸ்தை வழங்கியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!