நிச்சயமாக மீண்டு வருவேன்

‘பீப்’ பாடல் விவகாரம் குறித்து நடிகர் சிம்பு தனது டுவிட்டரில் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் சிலர் என்னைக் கீழே தள்ளிவிட முயன்றாலும் அவற்றில் இருந்து ரசிகர்கள் பெருமைகொள்ளும் விதத்தில் மீண்டு வருவேன். எனக்கு அந்த நம்பிக்கை அதிகம் உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார். சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் முன்னோட்ட காட்சிகள் புத்தாண்டில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இணையத்தளத்தில் அந்த முன்னோட்டத்தை இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இது சிம்புவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து சிம்பு நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இந்தப் படத்தை பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டு வரத் திட்டமிட்டு உள்ளனராம். தற்போதைய சூழ்நிலையில் இந்தப் படத்தின் வசூல் நிச்சயமாக எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும் எனப் படத் தயாரிப்புத் தரப்பு கணக்கிட்டுள்ளதாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமிழில் வெளியாகும் சில படங்கள் தம்மைப் பிரமிக்க வைப்பதாகக் கூறுகிறார் க‌ஷ்மீரா. படம்: ஊடகம்

13 Nov 2019

கஷ்மீரா: தமிழ் சினிமாவில் அன்பு பாராட்டுகிறார்கள்

ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வழி கலந்துரையாடிய நடிகை நிவேதா தாமஸ் தற்போது அதற்காக வருந்துவதாகத் தகவல். படம்: ஊடகம்

13 Nov 2019

கண்ணியம் தேவை: நிவேதா கோபம்