“இனி கதைக்குதான் முக்கியத்துவம்”

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தெலுங்கில் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. ஆனாலும், தமிழில் 'கத்தி' தவிர, வேறு எந்த படமும் பெரிய வெற்றி பெறவில்லை. எனினும் தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப் பிடத்தக்கது. இந்நிலையில் அதிரடி முடிவு எடுத்துள்ளாராம் அம்மணி. இப்போது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு, இனி கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தான் தேர்ந்தெடுக்க உள்ளாராம்.

"இனி கதைதான் எனக்கு முக்கியம். முன்னணி நடிகர்கள் என்பதற்காக நடிக்க சம்மதிக்க மாட்டேன். அதிக சம்பளம் என்று ஆசை காட்டியும் என் மனதை மாற்ற முடியாது," என்கிறாராம் சமந்தா. இதனால் இவரிடம் கதை சொல்ல வரும் புதுமுக இயக்குநரில் பலரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையே கூறி வருவதாகத் தெரிகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!