நல்ல கூட்டணி அமைய பிரேமலதா சிறப்பு வழிபாடு

காஞ்சிபுரம்: எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணி தங் கள் எண்ணப்படி அமைய வேண் டும் என்றும் வரும் சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்றும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு வழிபாட்டில் பிரேமலதா விஜயகாந்த் வேண்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஊழல் செய்யாத கட்சிகளுடன் கூட்டணி அமைய வேண்டும் என அவர் வேண்டிக் கொண்ட தாகக் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல முக்கிய கட்சிகள் தேமுதிகவுடன் கூட் டணி அமைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா நேற்று முன்தினம் நள்ளிரவு காமாட்சியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டார். கோவிலில் வழிபாடு முடிந்த பின் வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது கூறியதாவது:

"தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ், விஜயகாந்த் கிங் மேக்கராக இருப்பதற்குப் பதில் 'கிங்'காக இருக்க சம்மதம் தெரிவித்துள்ளார், "அதற்கு, தேமுதிக சார்பில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். "தேமுதிக மாநாடு வெற்றி கரமாக நடக்க காஞ்சி காமாட்சி அம்மனிடம் நான் வேண்டியிருந் தேன். "அதன்படி, மாநாடு பெரும் வெற்றி பெற்று தமிழக அரசியலில் திருப்புமுனையினை ஏற்படுத்தி உள்ளது. "இதற்காகவும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக வெற்றி பெற வேண்டியும் சிறப்பு வழிபாடு நடத்த வந்தேன்," என்று அவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!