இளையர்கள் அரசியலுக்கு வர நல்லக்கண்ணு கோரிக்கை

சென்னை: இன்றைய சூழலில் இளையர்களின் பங்களிப்பு அரசி யலுக்கு மிகவும் தேவை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கல்லூரி விழா ஒன்றில் பேசிய அவர், நாடு விடுதலை அடைந்து விட்டாலும் சமூக விடுதலை அடைய வேண்டிய கட்டாயம் நீடிப்பதாகக் கவலை தெரிவித்தார். "மக்கள் நலக் கூட்டணி சார் பில் ஆட்சி மாற்றத்தை தர வேண் டும் என்பதே எங்களது விருப்பம். வெறும் ஆட்களை மாற்றுவது மட்டுமே மாற்றமாகிவிடாது. மாறாக, கொள்கை அளவில் மக்களுக்கு மாற்றத்தை அளிக்க வேண்டும்," என்றார் நல்லகண்ணு. இத்தகைய ஆட்சி மாற்றமே தேவைப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அப்படியொரு மாற்றத்தை மக்கள் நலக் கூட்டணியால் தர முடியும் என்றார். "எனவே அதிகமான இளையர் கள் அரசியலுக்கு வரவேண்டும். அவர்கள் அனைவரும் சமூக நலனில் அக்கறை கொண்டு தங்களால் இயன்ற வரை நாட்டுக்காகப் பாடுபட வேண்டும்," என்று நல்லக்கண்ணு கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!