மக்கள் நலக் கூட்டணிக்கும் அதிமுகவுக்குமே போட்டி: திருமா

விழுப்புரம்: நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் முதல் எதிரி மக்கள் நலக் கூட்டணிதான் என்கிறார் அதில் அங்கத்துவம் பெற்றுள்ள விடுலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். மக்கள் நலக் கூட்டணியானது தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிறப்புச் செயற்குழுக் கூட்டம் நடைபெற் றது. இதன் பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய திருமாவளவன், தேர்தலின்போது தங்கள் கூட்ட ணியின் பலம் குறித்து அனை வருக்கும் நிச்சயம் தெரிய வரும் என்றார்.

"தமிழகத்தில் மாற்று அரசிய லுக்கான மக்கள் நலக் கூட்ட ணியின் இரண்டாம் கட்ட சுற்றுப் பயணம் 12 மாவட்டங்களில் முடிதுள்ளது. இந்தப் பயணம் மகத்தான வரவேற்பைப் பெற்றது. அடுத்து, மூன்றாம் கட்ட சுற்றுப்பயணம், மார்ச் 1ஆம் தேதி தொடங்குகிறது," என்றார் திருமா வளவன். வேலூர், காஞ்சிபுரம், திருவள் ளூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் மார்ச் 4ஆம் தேதி வரை மக்களைச் சந்திக்க உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பாஜகவின் எச்.ராஜா வரம்பு மீறி பேசி வருவதாகக் குற்றம் சாட்டினார். புதுடெல்லி நேரு பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்யா குமார் மீது போடப்பட்டுள்ள தேச விரோத வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!