வயதானோர் துடிப்புடனும் சுகாதாரத்துடனும் மூப்படைவதற்கான $3 பில்லியன் மதிப்பிலான செயல்முறைத் திட்டத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 70 நடவடிக்கைகளைக் கொண்ட துடிப்புடன் மூப்படைவதற்கான திட்ட அறிக்கை நேற்று நடைபெற்ற 'எஸ்ஜிஃபியூச்சர்' உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் வெளியீடு கண்டது. சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர், "பலர் மூப்படைவது நாட்டின் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான அம்சம்," என்று நேற்றைய நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.
2014, 2015 ஆண்டுகளில் பல தொடர் பொதுமக்கள் கலந் துரையாடல்களுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. மறு வேலைவாய்ப்புக்கான வயதை 65லிருந்து 67ஆக உயர்த்துதல், 2020ஆம் ஆண்டுக்குள் மேலும் 40 பகல்நேர மூத்தோர் பராமரிப்பு நிலையங்களை அமைத் தல், மூத்தோருக்குப் பிடித்த நடவடிக்கைகளை அவர்கள் மேற் கொள்வதற்கான தேசிய சில்வர் அகாடமியை உருவாக்குதல் ஆகிய முயற்சிகள் இந்தத் திட்டத்தில் அடங்கும். இந்தத் திட்டத்தின் நட வடிக்கைகளை எவ்வாறு செயல் படுத்துவது என்பது குறித்த கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடத்தப்படும் என டாக்டர் கோர் தெரிவித்தார். முழு அறிக்கையை www.successful-ageing.sg என்ற இணையப்பக்கத்தில் காணலாம்.