இந்தியாவில் அதிகரிக்கும் கோடீஸ்வரர்கள்

­­­இந்­தி­யா­வில் புதிதாக 27 கோடீஸ்­வ­ரர்­கள் உரு­வா­கி­யுள்­ள­னர். 26 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் சொத்து வைத்­தி­ருக்­கும் தொழி­ல­தி­பர் முகேஷ் அம்பானி இந்­தி­யக் கோடீஸ்­வ­ரர்­களில் முதல் இடத்­தி­லும் உலகக் கோடீஸ்­வ­ரர்­களில் 21வது இடத்­தி­லும் உள்ளார். 'ஹருன் குளோப'லின் 2016ஆம் ஆண்­டுக்­கான கோடீஸ் வரர்கள் பட்­டி­ய­லின்­படி இந்­தி­யா ­வில் 111 கோடீஸ்­வர்­கள் உள்­ள­னர். பெரும்பா­லா­ன­வர்­கள் மும்பை யைச் சேர்ந்த­வர்­கள். இவர்­க­ளது மொத்த சொத்து மதிப்பு யுஎஸ் $308 பில்­லி­யன். கடந்த ஆண்டில் இவர்­களின் சொத்­து­கள் 25% வளர்ச்சி கண்­டுள்­ளன. உல­க­ள­வில் 99 புதிய கோடீஸ்­வ­ரர்­கள் பட்­டி­ய­லில் சேர்க்­கப்பட்­ டுள்­ள­னர். 2016ன் மொத்த கோடீஸ்­வ­ரர் எண்­ணிக்கை­ 2,188. இது 2013ஆம் ஆண்டின் எண்­ணிக்கையைவிட 50% அதிகம்.

560 கோடீஸ்­வ­ரர்­களுடன் சீனா, 535 கோடீஸ்­வ­ரர்­களை பெற்றுள்ள அமெ­ரிக்­காவை முந்­தி­விட்­டது. 'உலகின் கோடீஸ்­வ­ரர்­கள் தலை­ந­கர'மாகி­யுள்­ளது பெய்ஜிங். சுய உழைப்­பில் தலை­யெ­டுக்­கும் கோடீஸ்­வ­ரர்­களை உரு­வாக்­கு­வ­தில் சீனா முத­லி­டத்­தில் உள்ளது. சீனக் கோடீஸ்­வ­ரர்­களின் மொத்த சொத்து மதிப்பு யுஎஸ் $1.4 டிரில்­லி­யன். இது ஆஸ்­தி­ரே­லி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யின் அள­வா­கும். அதே­நே­ரத்­தில் 'ஹருன்' பட்டியலின்படி ரஷ்ய கோடீஸ்­வ­ரர்­கள் யுஎஸ் $130 பில்­லி­யனை இழந்­துள்­ள­னர். உலகில் மொத்தம் 729 பேரது சொத்து மதிப்பு குறைந்­துள்­ளது. 102 பேர் கோடீஸ்­வ­ரர் பட்­டி­ய­லிருந்து நீக்­கப்­பட்­டுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!