பாஜக: அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பில்லை

தமிழக சட்­ட­மன்றத் தேர்­த­லில் எதிர்­பார்க்­கப்­பட்ட அதிமுக-=பாஜக கூட்­ட­ணிக்கு வாய்ப்பு இல்லை என்பதை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்த­ர­ரா­ஜன் உறு­திப்­படுத்­தி­யுள்­ளார். "அதிமுக, திமு­க­வுக்கு மாற் றாக தமி­ழ­கத்­தில் ஓர் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே பாஜ­க­வின் நோக்கம். எனவே, அதி­மு­க­வு­டன் கூட்­ட­ணிக்கு வாய்ப்பு இல்லை," என்ற தமிழிசை தேமுதிக, பாம­க­வு­டன் பேசி வரு­வ­தாக இந்து நாளி­த­ழுக்கு அளித்த பேட்­டி­யில் அவர் கூறி­யுள்­ளார். கடந்த மக்­க­ளவைத் தேர்­தலைப்­போல வலுவான 3வது அணி அமைக்­கும் முயற்­சி­யில் பாஜக ஈடு­பட்­டுள்­ள­தா­க­வும் தமாகா, விடு­தலைச் சிறுத்தை­கள் கட்­சி­களை­யும் இதில் இணைக்­கும் முயற்சி நடப்­பதாக­வும் அவர் குறிப்­பிட்­டார்.

விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி?

அதே­நே­ரத்­தில், 'கிங் மேக்­க­ராக' இருப்­பதை­விட 'கிங்'காக இருக்­கவே விரும்­பும் விஜ­ய­காந்த் பாஜகவா, மக்கள் நலக்­கூட்­ட­ணியா என பூவா, தலையா போட்டுப் பார்த்­துக்­கொண்­டி­ருப்­ப­தா­கத் தக வல்­கள் கூறு­கின்றன. இந்நிலையில், தமாகா தலைவர் வாசன், கடந்த மூன்று நாட்கள் நடத்­திய நேர்­கா­ண­லில் விஜ­ய­காந்த் இடம்­பெ­றும் மக்கள் நலக் கூட்­ட­ணி­யில் தமாகா இடம் பெறலாமா என்ற கேள்­வியையே எழுப்­பி­யுள்­ளார். அதற்கு கட்சி பிர­மு­கர்­ கள் பலரும் ஆதரவளித்துள்­ள னர். எனவே, விஜ­ய­காந்த் மக்கள் நலக் கூட்­ட­ணிக்­குத் தலைமை வகித்­தால் அக்­கூட்­ட­ணி­யில் தமாகா இடம்­பெற வாய்ப்­புள்­ளது.

தமிழிசை செளந்திரராஜன் பிப்ரவரி 16ஆம் தேதி நடந்த தனது மகன் சுகநாதன் திருமணத்திற்கு திருமணப் பத்திரிகை வைத்து அழைத்தபோது. கோப்புப்படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!