துணைக்கோள உதவியுடன் மின்னியல் சாலைக் கட்டண முறை

சிங்கப்­பூ­ரில் சாலைக் கட்­ட­ணங்களை வசூ­லிக்க துணைக்­ கோ­ளத்தைப் பயன்­படுத்­தும் புதிய முறை அறி­மு­கப்­படுத்­தப்­ப­ட­ உள்­ளது. அதற்­கான மேம்பாட்­டுப் பணி களுக்­கான ஏலக்குத்தகையை என்­சி­எஸ், மிட்­சு­பி‌ஷி ஹெவி இண்டஸ்ட்­ரீஸ் ஆகிய நிறு­வ­னங்களுக்கு நிலப் போக்­கு­வ­ரத்து ஆணையம் அளித்­துள்­ளது. $556 மில்­லி­யன் குத்தகை ஒப்­பந்தத்­தின் மேம்பாட்­டுப் பணிகள் அடுத்த ஆண்டு இரண்டாம் காலாண்­டில் தொடங்­கும் எனவும் ஆணையம் நேற்று தெரி­வித்­தது. 2020ஆம் ஆண்­டுக்­குள் இந்த புதிய துணைக்­கோள மின்னியல் சாலைக் கட்டண முறை நடப்­புக்கு வரும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

தற்­போ­துள்ள மின்னியல் ­சாலைக் கட்டண முறை 1998ல் தொடங்கப்­பட்­டது. இப்போது அதைப் பரா­ம­ரிப்­ப­தும் கடினம். அதற்­கான செல­வு­களும் அதி­க­ரித்­துக்­கொண்டே உள்ளன என ஆணையம் அதன் அறிக்கை­யில் தெரி­வித்­தது. அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டண முறை, போக்­கு­வ­ரத்து நெரி­சலைக் கண்ட­றிந்து நிர்­வ­கிக்­க­வும் வழி­வ­குக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!